வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அதைப்போல் இந்தியா செய்தால் அது சர்வதேச ஜனநாயகத்தை மீறிய செயல் என்று இதே டிரம்ப் கதறுவார்...
இதேபோல் இந்திய கடல் எல்லைக்குள் போதைப்பொருள் கடத்துபவர்களையும் இந்திய கடற்படையினர் சுட்டுத்தள்ளவேண்டும்.
வாஷிங்டன்; வெனிசுலா கடற்கரையில் போதைப்பொருட்கள் கடத்த முயன்ற கப்பல் மீது அமெரிக்க ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். ஒரே மாதத்தில் 2வது முறையாக தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது.தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று, வெனிசுலா. அந்நாட்டில் மூன்றாவது முறையாக நிகோலஸ் மதுரோ அதிபராக உள்ளார். இவர், உலகின் மிகப் பெரிய போதைப் பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராக செயல்படுவதாகவும், போதைப் பொருள் கும்பல்களுடன் இணைந்து அமெரிக்காவுக்குள் போதைப் பொருட்களை சப்ளை செய்வதாகவும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி வருகிறார்.மதுரோவை கைது செய்தால் வழங்கப்படும் பரிசுத் தொகையை, 415 கோடி ரூபாயாக இரண்டு மடங்காக உயர்த்தி, அமெரிக்கா சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில் வெனிசுலா கடற்கரையில் ஒரு கப்பலின் மீது அமெரிக்கப் படைகள் ராணுவத் தாக்குதல் நடத்தியதில், 3 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்கா ராணுவம் நடத்திய தாக்குதலில் வெனிசுலா நாட்டு கப்பல் பற்றி எரியும் 28 வினாடிகள் கொண்ட வீடியோ காட்சியை டிரம்ப் வெளியிட்டு உள்ளார்.வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவுடன் தொடர்புடைய போதைப் பொருள் பயங்கரவாதிகள் அமெரிக்காவுக்குள் போதைப் பொருட்களை கடத்தியதால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இந்த தாக்குதல் அவசியம். நீங்கள் அமெரிக்கர்களை கொல்லக்கூடிய போதைப்பொருட்களை சப்ளை செய்வதால், நாங்கள் உங்களை வேட்டையாடுகிறோம். போதைப்பொருட்கள் சப்ளை மூலம் பல ஆண்டுகளாக மில்லியன் கணக்கான அமெரிக்கர்களை கொன்றுள்ளனர். இனி நாங்கள் அதனை பொறுத்துக்கொள்ள மாட்டோம். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.கடந்த செப்டம்பர் 3ம் தேதி வெனிசுலா கடற்கரையில் போதைப்பொருட்கள் கடத்த முயன்ற கப்பல் மீது அமெரிக்க ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதில், 11 பேர் உயிரிழந்தனர். தற்போது 2வது முறையாக வெனிசுலா கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
அதைப்போல் இந்தியா செய்தால் அது சர்வதேச ஜனநாயகத்தை மீறிய செயல் என்று இதே டிரம்ப் கதறுவார்...
இதேபோல் இந்திய கடல் எல்லைக்குள் போதைப்பொருள் கடத்துபவர்களையும் இந்திய கடற்படையினர் சுட்டுத்தள்ளவேண்டும்.