உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தென் சீன கடல் பகுதியில் அமெரிக்க விமானம் விபத்து

தென் சீன கடல் பகுதியில் அமெரிக்க விமானம் விபத்து

பீஜிங்: தென் சீன கடல் பகுதியில் நடந்த இருவேறு நிகழ்வுகளில் அமெரிக்க போர் விமானம் மற்றும் கடற்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாயின. நம் அண்டை நாடான சீனா உரிமை கொண்டாடி வரும் தென்சீன கடல் பகுதியில், அமெரிக்க கடற்படையின் 'நிமிட்ஸ்' என பெயரிடப்பட்டுள்ள விமானம் தாங்கி கப்பல் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்தக் கப்பலில் இருந்து வழக்கமான ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஒரு கடற்படை ஹெலிகாப்டரும், ஒரு போர் விமானமும் 30 நிமிடங்கள் இடைவெளியில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கின. இதில் பயணித்த விமான ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சகம், இது ஒரு ராணுவ பயிற்சி விபத்து என்றும், தேவைப்பட்டால் அமெரிக்காவுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க சீனா தயாராக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை