உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்திய இணைய உலகை கைப்பற்ற அமெரிக்கா சதி: ‛‛மாஸ்கை கழற்றி கொடூர முகம் காட்டும் மஸ்க்

இந்திய இணைய உலகை கைப்பற்ற அமெரிக்கா சதி: ‛‛மாஸ்கை கழற்றி கொடூர முகம் காட்டும் மஸ்க்

உலகின் நம்பர் 1 பணக்காரர் எலான் மஸ்க்கின் பார்வை இந்தியா மீது முன்பே பதிந்துவிட்டது. இந்தியாவின் இணைய மார்க்கெட்டை ஒட்டுமொத்தமாக கைப்பற்ற துடியாய் துடிக்கிறார். அதற்காக அனைத்து விதமான நாடகங்களையும் போட ஆரம்பித்து விட்டார். அவருக்கு அந்நாட்டின் அதிபர் டிரம்ப் முடிந்தளவுக்கு முட்டு கொடுப்பார்.இந்திய இணையத்தின் வலிமை* ‛‛டிராய்'' கணக்குப்படி 2026 மார்ச் வரை இந்தியாவில் உள்ள வயர்லெஸ் இன்டர்நெட் இணைப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை 104 கோடி.* கேபிளுடன் கூடிய இன்டர்நெட் இணைப்பு வைத்துள்ளவர்கள் 4.66 கோடி.* அதே நேரம் அமெரிக்காவில் இன்டர்நெட் இணைப்பு வைத்துள்ளவர்களின் எண்ணிக்கை வெறும் 33 கோடி.அதாவது அமெரிக்காவை விட இந்தியாவில் உள்ள இணைய இணைப்புகளின் எண்ணிக்கை எத்தனை மடங்கு என பார்த்துக்கொள்ளுங்கள். இந்த அபரிமிதமான மார்க்கெட் தான் அமெரிக்காவையும் அது போட்ட குட்டி எலான் மஸ்கின் கண்ணையும் உறுத்துகிறது. இந்தியாவிற்குள் நுழைய சகலவிதமான சாகசங்களையும் பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் நேரடியாக சாட்டிலைட் வழியாக இணைய தொடர்பை வழங்குகிறது. பல்வேறு நாடுகளில் இந்நிறுவனம் செயல்படுகிறது. இந்தியாவிற்குள் நுழைய மட்டும் இது கொஞ்சம் சிரமப்படுகிறது. காரணம் இந்தியா மேற்கொண்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கை. நேரடியாக சாட்டிலைட் மூலம் இயங்குவதால் ஸ்டார்லிங்க் நெட்வொர்க் நமது நாட்டின் கட்டுப்பாட்டுக்குள் வராது. இந்தியர்கள் பற்றிய அனைத்து தரவுகளும் அமெரிக்கர்களின் கைக்கு எளிதாக சென்று விடும். அதை வைத்துக்கொண்டு அவர்கள் நம் நாட்டுக்குள் ஏகப்பட்ட அரசியல் விளையாட்டுகளை விளையாடுவார்கள். இது தெரிந்து தான் இந்தியா பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.பொறுத்து பொறுத்துப் பார்த்த எலான் மஸ்க், தனது ''மாஸ்கை'' கழற்றிவிட்டு, தனது கொடூர முகத்தை காட்டுகிறார். ‛‛இந்தியாவுக்கு யார் முதலாளி? அம்பானியா'' என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, இந்தியர்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது'' என்றும் கூறியுள்ளார்.அதாவது, மஸ்கின் ‛‛ஸ்டார்லிங்கை'' இந்தியாவிற்குள் நுழைய விட்டால், மத்திய அரசு நல்ல அரசாகிவிடும். இல்லாவிட்டால் அது கெட்ட அரசு. நம் ஊரில் மலிவாக கிடைக்கும் இணையதள வசதி, ஸ்டார்லிங்கிடம் போனால் 20 மடங்கு கட்டணம் உயரும். ஏழைகளுக்கும் இன்டர்நெட் வசதி கிடைப்பது பாதிக்கப்படும். மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு இதுவும் ஒரு காரணம். அடுத்த என்ன செய்வார்கள்?* அடுத்து இந்த அமெரிக்கர்கள் என்ன செய்வார்கள். நம் நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கான வேலையை ஆரம்பிப்பார்கள்.* ஸ்டார்லிங்கின் தொழில்நுட்பம் ஏற்கனவே 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆட்சி மாற்றத்திற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது, அதை இந்தியாவிலும் செயல்படுத்த தீவிரமாக துடிக்கிறார்கள்.* அடுத்து டில்லியை மையமாகக் கொண்டு நாடு முழுவதும் போராட்டங்கள் நடக்கும்.* மதம், ஜாதி, வடக்கு - தெற்குப் பிரிவினை, தொகுதி மறுவரையறை, ஹிந்தி திணிப்பு என ஒவ்வொரு பிரச்னையாக உருவாக்குவார்கள். * உங்களைச் சுற்றியுள்ள அனைத்தும் மோசமாக இருப்பதாகவும், அதற்குக் காரணம் பிரதமர் மோடிதான் என்றும் அனைத்து சமூக ஊடக அல்காரிதம்களும் உங்களை நம்ப வைக்கும்.* மோடிக்கு எதிரான பதிவுகள் பன்மடங்கு பெருகும். மோடிக்கு ஆதரவான பதிவுகள் ஒடுக்கப்படும்.* போராட்டக்காரர்கள் கடுமையாக ஒடுக்கப்படுகிறார்கள் என்று போலி வீடியோக்கள் பரப்பப்படும். தீயது நடக்கப் போகிறது. அரசு அராஜகம் செய்கிறது என்று மக்கள் நம்ப வைக்கப்படுவார்கள்.* சமூக ஊடக அல்காரிதம் மிகப்பெரிய கருவியாக பயன்படுத்தப்படும். உலகளாவிய ஊடகங்களும், இந்தியாவில் புரட்சி நடக்கப் போகிறது என்று ‛‛பூச்சாண்டி'' காட்டும்.* உண்மையில் மோடியின் வலிமையான தலைமை மீது அமெரிக்கா விரக்தியடைந்துள்ளது. அவர் மேற்கத்திய நாடுகளுக்கு முன் மண்டியிடவில்லை. எனவே அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ, மோடிக்கு எதிராக பல்வேறு திட்டங்களை தயாரித்து வருகிறது.* தேர்தல் ஆணையம், ‛‛நீட்'' எதிர்ப்பு, மத்திய அரசு எதிர்ப்பு போன்ற போராட்டங்கள் எல்லாமே அப்படிப்பட்டவை தான். இந்த சதி வலையில் நம் நாட்டின் எதிர்க்கட்சி தலைவர்களும் சிக்குவது தான் இன்னும் கொடுமை. எனவே, பொதுமக்கள் தான் கவனமாக இருந்து நாசகார சக்திகளுக்கு எதிராக நின்று நாட்டைக் காப்பாற்ற வேண்டும்.ஆனால், மத்திய அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்க்கும் ராகுல், வழக்கம் போல இந்திய அரசை எதிர்கொள்ள நமக்கு ஒரு ஆள் கிடைத்தான் என்று எலான் மஸ்க்கை வரவேற்று, ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 90 )

Natarajan
அக் 25, 2026 06:49

இது குறித்து அமெரிக்காவில் ஒரு செய்தி உள்ளது. இது சரியாகவே இருக்கிறது. நான் இதற்கு முன்பு பல முறை இங்கு எனது கருத்தை தெரிவித்ததுபோல, இது இந்தியாவின் இறையாண்மையை உள்ளடக்கியது. இதை இந்தியா ஒருபோதும் கைவிடக் கூடாது. தவிர, ஒரு சாதாரண பயனராக, மஸ்க்கின் ஸ்டார் லிங்க் மூலம் நான் தள்ளப்படுவதை விரும்பவில்லை. இந்தியாவுக்கும் மற்றொரு நாட்டிற்கும் இடையே போர் உள்ளது என்றால், மஸ்க் உங்கள் தகவல்தொடர்பு திறனை நிறுத்தக்கூடும். அதனால்தான், இந்தியா ஒருபோதும் மற்றொரு நாட்டின் அடிப்படையிலான மற்றும் கட்டுப் படுத்தப்படும் எந்தவொரு சேவையையும் பயன்படுத்தக் கூடாது, நட்பு நாடாக இருந்தாலும் கூடாது.


M Ramachandran
அக் 16, 2026 19:41

மர்யாதையை காப்பற்றி கோலா தெரியாமல் உதார் விட்டால் அப்புறம் பங்காள தேசத்தில் அவர்கள் கையால் முடிக்க பட்டது மறந்திருக்காது.


M Ramachandran
அக் 16, 2026 19:39

ஜெய்சங்கர் மற்றும் அஜித் தோவால் இருவரும் பார்த்து கொள்ளவார்கள். அவசிய மில்லாமல் வாலை நீட்டினால் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.


M Ramachandran
அக் 16, 2026 19:35

தலை ஒரு நாள் கிள்ளி பாகிஸ்தானில் எரிய படும். அவர்கள் பின் லீடன் சாவுக்குக்கு பாலி தீர்த்துட்டோம்னு பீத்திப்பான்ங்க.


Zi King
அக் 12, 2026 17:03

We know successful Tesla is in Indian market, just ignore musk. Before Musk starts service, Jio & AIrtel will be selling the service for chump change, using cheap Indian rockets & satellites. Our govt will ask FTA for Jio & Airtel service launch in USA - then everything will bee on a limbo - Make in India Vs MAGA :


Palanisamy Sekar
அக் 12, 2026 08:49

செறிவூட்டப்பட்ட மக்கா சோளத்தை இந்தியாவில் இறக்குமதி செய்ய வற்புறுத்திய ட்ரம்பின் அழுத்தத்தை நிராகரித்த நமது பாரத பிரதமரின் செயல்பாட்டினை கண்டு எரிச்சல் கொண்ட ட்ரம்ப் இந்தியாவுக்கு எதிராக செலுத்தப்பட்ட எலன் மாஸ்க் மூலம் இந்தியாவின் சமயநல நன்னிலத்தை கெடுப்பதற்காகவே அனுப்பட்ட ஆள். இவரை உள்ளே அனுமதித்தால் இந்தியாவில் உள்நாட்டு கலவரத்தை தூண்டிவிட்டு வளர்ந்துவருகின்ற பொருளாதாரத்தை நசுக்க பார்க்கின்றார். அதிலும் பிரிஸ்க் மாநாட்டை கண்டு பொங்கிய ட்ரம்ப் தனது ஆட்சிக்காலத்திற்குள் இந்தியாவை துண்டாட பார்க்கின்றார். அதன் தாக்கம்தான் இந்த எலனமாஸ்க் . இவர்களாகவே ஒரு ஐ டி யை உருவாக்கி தற்போது நடக்கின்ற கரப்பான் பூச்சிகளுக்கு ஆதரவாக வதந்தியை கிளப்பிவிட்டு உள்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தவே உள்ளே நுழைய பார்க்கின்றார்கள். அதற்கு மம்தா ராகுல் மற்றும் எப்பவுமே இந்தியாவுக்கு எதிரியாக செய்லபடுகின்ற கம்யூனிஸ்டுகளுக்கு உதவுமாறு செய்வதுதான் மாஸ்கின் நோக்கமே. இன்றைய இளைஞர்கள் அமெரிக்காவின் சதியை உணர்ந்து கொண்டுதான் பார்த்த பிரதமரின் செயல்பாடுகளுக்கு பெரிய அளவின் அங்கீகாரத்தை கொடுத்து வருகின்றார்கள். கரப்பான்களுக்கு விமான சொகுசு பயணத்துக்கும் நாட்டில் உதார் கலவரம் நடத்தவும் பெரிய அளவில் பணப்பட்டுவாடாவை செய்கின்ற கூட்டத்தில் இந்த மாஸ்க்கும் ஒருத்தன். எந்த வகையிலாவது அமெரிக்காவின் எலன் மாஸ்க் வியாபாரத்தை தடுத்து நிறுத்திய ஆகணும்.


venkatan
அக் 11, 2026 10:02

இந்த உலகப்பெரு முத்தலிப் பெருச்சாளியும் டிரம்பும் கபளீகரம் செய்துவிடுவார்.


விருமாண்டி
அக் 10, 2026 15:59

மஸ்கை திமாகி நக்சல் ப்போலவும், அம்பானியை தேஷ்பக்த் போலவும் சொல்லி காமெடி பண்ண வேண்டாம். தகுந்த விலை கொடுத்தால் பங்குகளையும், கம்பெனியின் போர்டையும் ஒட்டுமொத்தமாக விற்று போய்விடுவார் அம்பானி. இஸ்ரேலிய நாட்டு உளவு செயலிகளை எதிர்கட்சியினர் மற்றும் இல்லாமல், ராணுவ அதிகாரி, நீதிபதி என்று அனைவரையும் உளவு பார்த்து சாதனை படைத்தவர் மோடி. அத்தனை தரவுகளும் இஸ்ரேலிய உளவுத்துறையுடன் பகிரப்பட்டது. அப்போது மட்டும் இந்திய ரகசியத்தை பற்றி கவலைப்படாமல் இருந்தாரே.


vijay
அக் 10, 2026 22:11

நீ சொன்ன கருத்துக்கு ஆதாரங்கள் கொடு. ராகுல் மாதிரி பேசினால் கோர்ட்டில் வழக்கு சந்திக்கவேண்டும். தயாராக இருப்பா.


பேசும் தமிழன்
அக் 10, 2026 14:22

இந்தியாவிற்கு எதிராக யார் செயல்பட்டாலும்.... அவர்களின் கூட்டாளியாக அவர் இருப்பார்.... அந்தளவுக்கு நல்லவர் அவர்... மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் விரட்டி விரட்டி அடிப்பதால்.... பதவி வெறியில்...எதை தின்றால் பித்தம் தெளியும் என்று அலைகிறார்.


தத்வமசி
அக் 10, 2026 13:02

எங்களுக்கு இன்று குறைந்த விலையில் இணைய வசதி கிடைக்கிறது என்றால் அதற்கு காரணம் அம்பானி தான். இலான் மஸ்க் அல்லது எந்த வெளிநாட்டு கம்பெனிகளும் அல்ல. இந்தியாவிலேயே மிகப் பெரிய கம்பெனி அம்பானி நிறுவனங்கள். லட்சக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பை அளித்து இந்தியாவின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் அம்பானி தான் வியாபார நிறுவனங்களின் தலைவர். கடைக்கோடி இந்தியனும் எல்லா கிராமங்களிலும் இணையதள வசதியும், தொலைகாட்சி வசதியும் உள்ளது என்றால் அதற்குக் காரணம் அம்பானி தான். திருட்டு திராவிட கும்பலில் கம்பெனி வைத்துள்ள எவனும் இந்தியாவின் வளர்ச்சியில் பங்கு கொள்ளவில்லை. தான் சம்பாதிப்பதிலேயே இருக்கிறான்.


புதிய வீடியோ