உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மத்தியஸ்தம் செய்ய தயார்: காஷ்மீர் பிரச்னையில் மூக்கை நுழைக்கும் டிரம்ப்!

மத்தியஸ்தம் செய்ய தயார்: காஷ்மீர் பிரச்னையில் மூக்கை நுழைக்கும் டிரம்ப்!

வாஷிங்டன்: ''காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய தயார்'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.இது குறித்து சமூக வலைதளத்தில் அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியா மற்றும் பாகிஸ்தானின் வலுவான மற்றும் அசைக்க முடியாத சக்திவாய்ந்த தலைமையைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அமெரிக்காவின் பேச்சுவார்த்தையை ஏற்று தாக்குதலை நிறுத்தியதற்கு நன்றி.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=natshx8i&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அமெரிக்கா உங்களுக்கு உதவ முடிந்தது என்பதில் நான் பெருமைப்படுகிறேன். இந்த இரண்டு பெரிய நாடுகளுடனும் வர்த்தகத்தை கணிசமாக அதிகரிக்கப் போகிறேன். காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய தயார். பல ஆண்டுகளாக நீடிக்கும் காஷ்மீர் பிரச்னையில் தீர்வு காண உதவ தயாராக இருக்கிறேன். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ஏற்கனவே, இந்தியா- பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்டதாக முதலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

kalyan
மே 15, 2025 11:17

டிரம்ப் மத்தியஸ்தம் செய்கிறேன் என்று கிளம்பி 3 மாதத்திற்குள் ரஷ்யாவும் உக்ரைனும் "உன் பஞ்சாயத்தே வேண்டாம்" என்று எண்ணி தங்களுக்குள்ளேயே பேச்சு வார்த்தைகளுக்கு தயாராகி விட்டனர்.


sethusubramaniam
மே 12, 2025 21:45

பூனைகளுக்கு குரங்கு ஆப்பம் பங்கிட்டு குடுத்த கதை எங்களுக்கு சின்ன வயசுலேயே சொல்லிக்கொடுத்து இருக்காங்க. ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்னு பழமொழி இருக்கு .


சரவணக்குமார்
மே 12, 2025 06:36

இந்தியா நாட்டு உள் விவகாரம்ங்களில் அமேரிக்கா அதிபர் டிரம்பு தலையிட தேவையில்லை. எங்கள் பாரத பிரதமர் மோடி ஐயா கூறியது போலா நாங்களோ பார்த்து கொள்ளுகிறோம்


raghasrin
மே 12, 2025 09:06

very well said. let Trump look after the welfare of his citizens


ரகு
மே 12, 2025 01:27

போடா டேய்


Easwar Kamal
மே 11, 2025 18:32

இந்த டிரம்ப் ஒரு வீனா போனவன். இந்திய உடனே டிரம்ப் சொன்னதினால் இறங்கி வந்தது பெரிய தவறு. இப்போது டிரம்ப் நாம் என்ன சொன்னாலும் இந்திய கேக்கும் என்று எண்ணி இப்போது காஷ்மீர் உள்ளெ சித்து விளையாட்டை ஆரம்பிக்கிறார். இந்திய டிரம்ப் பின்னால் செல்வதை தவிர்த்துவிட்டு தன வழியில் செல்ல வேண்டும். கனடா அமெரிக்காவின் மற்றொரு மாநிலம் என்று கூவினர் என்னவாயிற்று. சும்மா வெது துப்பாக்கி இந்த டிரம்ப். இந்த 4 ஆண்டு அமெரிக்காவின் மோசமான ஆண்டுதான்.


raghasrin
மே 12, 2025 09:09

no body in the earth can dictate or advice Modiji. Hon. Trump must stay calm and boost his own citizens .


Dharmavaan
மே 11, 2025 18:18

காஷ்மீரில்பேச ஒன்றுமில்லை என்று மோடி சொல்லிவிட்டார். ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு பாக் விலக வேண்டும் அவ்வளவே எதற்கு மூன்றாவது நபர்


என்றும் இந்தியன்
மே 11, 2025 18:14

டிரம்ப் trumpet டப்பா அடிக்கவேண்டாம் உன்னுடைய அமெரிக்காவில் நிலைமையை சரி செய் அது போதும்


sankaranarayanan
மே 11, 2025 17:07

அமெரிக்க அதிபர் டிரம்பு சமரசம் செய்யும் என்ற தொழிலில் இறங்கி இந்தியாவை குரங்கு தின்ன ஆப்பம் கதையாக ஆக்கிவிடக்கூடாது மோடி அவர்கள் ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ள வேண்டும்


கல்யாணராமன்
மே 11, 2025 16:32

இரண்டு குரங்குகள் கண்டெடுத்த ஓர் அப்பத்தை பங்கு போட்டுக்கொடுக்க வந்த நரி செய்த தந்திரத்தை அறிந்தவர்கள் இந்தியர்கள். நம்மிடமே வேலையை காண்பிக்க பார்க்கிறது அமெரிக்கா.


Bhakt
மே 11, 2025 16:21

இவரோட பெயரை டிரம்ப்க்கு பதில் டிரம்ப்பெட்டுனு வச்சு இருக்கலாம்.இவரோட பெருமையை தான் இவர் எப்போ பார்த்தாலும் ஊதிக்கிட்டு இருக்கார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை