உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மாறி மாறி வரி விதித்து வர்த்தக பதட்டம்; தீர்வு காண அதிபர் டிரம்ப், சீன அதிபர் பேச்சுவார்த்தை!

மாறி மாறி வரி விதித்து வர்த்தக பதட்டம்; தீர்வு காண அதிபர் டிரம்ப், சீன அதிபர் பேச்சுவார்த்தை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: வர்த்தக பதட்டங்களைத் தணிப்பது குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.அமெரிக்கா பொருட்களுக்கு சீனா அதிக வரி விதித்து வருகிறது என அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டினார். இதனையடுத்து சீன பொருட்களுக்கு அதிக வரி விதிக்க துவங்கினார். இதற்கு பதிலடியாக சீனாவும் வரி விதிக்க, இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக போர் துவங்கியது. ஒரு கட்டத்தில் சீன பொருட்களுக்கு அமெரிக்கா 145 சதவீதம் வரி விதித்தது. இரு நாடுகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து புதிய வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தன. மேலும் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. பின்னர், வர்த்தக ஒப்பந்தத்தை சீனா மீறிவிட்டது என அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார்.இந்நிலையில், வர்த்தக பதட்டங்களைத் தணிப்பது குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இந்த வாரம் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. வரி விதிப்பிற்கு முற்றுப்புள்ளி வைப்பது, உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் கூறியதாவது: வர்த்தக பதட்டங்களைத் தணிப்பது குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். அதிக வரி விதிப்பு மற்றும் பிற வர்த்தக பிரச்னைகளை தீர்க்க முக்கிய முடிவு எடுக்கப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

N Srinivasan
ஜூன் 03, 2025 12:41

கடைசியில் சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்ளுவது என்னவோ நிச்சயம் டிரம்ப்.


Nada Rajan
ஜூன் 03, 2025 09:25

அதிபர் டிரம்ப் மற்ற நாட்டு பிரச்சனையில் மூக்கை நுழைப்பதை நிறுத்த வேண்டும்


மீனவ நண்பன்
ஜூன் 03, 2025 08:55

இப்போ தான் ரஷ்யா உக்ரேன் சண்டையை நிறுத்தி வெள்ளை கொடி பறக்கவிட்டார் ..அதுக்குள்ள அடுத்த அசைன்மெண்டா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை