உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இதுவே என் கடைசி தேர்தல் : டிரம்ப்

இதுவே என் கடைசி தேர்தல் : டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: '2024ல் வெள்ளை மாளிகைக்குத் திரும்பும் முயற்சியில் தோல்வியுற்றால், 2028ல் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன் என்று நான் நினைக்கவில்லை,' என்று அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டிரம்ப் பேட்டி அளித்தார்.அவரிடம் 2028 தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா என பத்திரிக்கையாளர் கேள்வி கேட்டார்.இதற்கு டிரம்ப் பதிலளித்தாவது: இல்லை, நான் போட்டியிடமாட்டேன் என நினைக்கிறேன், அப்படித்தான் இருக்கும். நான் அதிபராக இருந்தபோது உருவாக்கப்பட்ட கோவிட்-19 தடுப்பூசிகளின் வளர்ச்சிக்காக பெருமை அடைகிறேன்.தடுப்பூசிகள் பற்றிய ஆய்வுகள் மற்றும் அவை பாதுகாப்பானதா என்பதை நாங்கள் கண்டுபிடிக்கப் போகிறோம்.நான் இப்போதும் நல்ல ஆரோக்யத்துடனும், நேரம் தவறாத உணவு பழக்கத்தையும் கடைபிடித்துவருகிறேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
செப் 23, 2024 20:31

இதுவே என்னுடைய கடைசி தேர்தல் என்று கூறி - அழுது - மக்களின் மனதை மாற்றப்பார்க்கிறார் டிரம்ப்.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 23, 2024 19:33

இதையேதான் எங்க ஊரு கட்டுமரம், அடுத்ததா கர்னாடக கட்டுமரம் தேவ கவுடா சொல்றது வழக்கம் ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை