உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்கா அதிபர் தேர்தல்; கமலாவை முந்துகிறார் டிரம்ப்; கருத்துக்கணிப்பு சொல்வது இதுதான்!

அமெரிக்கா அதிபர் தேர்தல்; கமலாவை முந்துகிறார் டிரம்ப்; கருத்துக்கணிப்பு சொல்வது இதுதான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிசை விட, குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்பிற்கு ஆதரவு அதிகரித்து வருகிறது என்பது கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ல் நடக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில், கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகின்றனர். அமெரிக்க தேர்தல் களம் எப்படி இருக்கிறது என்பது குறித்து அமெரிக்காவின் The Wall Street Journal' என்ற செய்தி நிறுவனம் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. அக்டோபர் 19-22 க்கு இடையில் 1,500 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் (registered voters) இடம் கருத்து கேட்கப்பட்டது.கமலா ஹாரிசை விட, குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்பிற்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. டிரம்பிற்கு ஓட்டளிக்க 47 சதவீத வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்தனர். கமலா ஹாரிசுக்கு 45 சதவீத வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்தனர். இரண்டு அதிபர் வேட்பாளர்களுக்கும் இன்னும் 50 சதவீதத்திற்கும் குறைவான ஆதரவே உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம், கமலாவுக்கு 49 சதவீதம் பேரும், டிரம்ப்வுக்கு 47 சதவீத பேரும் ஆதரவு தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. டிரம்ப்பை விட கமலா, முன்னிலையில் இருந்த நிலையில் தற்போது டிரெண்ட் என்பது முற்றிலுமாக மாறி உள்ளது. இதனால் டிரம்ப் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்று, வெள்ளை மாளிகையில் அமர போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

கிஜன்
அக் 26, 2024 21:04

ஒரு கருத்து ....ஏன் ராகுல் காந்தியையும் .... கமலா ஹாரிசையும் எதிர்க்கிறார்கள் என புரியவில்லை ...


kulandai kannan
அக் 26, 2024 17:57

50 சதவீத இந்தியரான கமலா ஹாரிஸைவிட 0 சவீத டிரம்ப் ஜெயிப்பது இந்தியாவுக்கு நல்லது.


SUBBU,MADURAI
அக் 26, 2024 19:03

இந்த கமலாஹாரிஸ் ஒரு போதும் இந்தியாவிற்கு சாதகமாக பேசியது இல்லை. மோடி தலைமையிலான மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் 370 சட்டத்தை நீக்கிய போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்தியாவிற்கு எதிராக கடும் கண்டனத்தை தெரிவித்தவர் கமலாஹாரிஸ். ஆகவே ட்ரம்ப் ஜெயித்து அதிபராவது தான் நம் பாரதத்திற்கு நல்லது.


SP
அக் 26, 2024 17:31

ட்ரம்ப் வெற்றி பெற்றால் நமக்கு நல்லது


Vijay D Ratnam
அக் 26, 2024 14:58

அப்போ கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாதா ? மன்னார்குடி ராஜகோபால சுவாமி பெருமாளே, செங்கமலத்தாயாரே, என்ன இது. உன் பிள்ளைகள் மீது ஏனிந்த கோபம். அன்று மன்னார்குடி சின்னம்மாக்கு தமிழ்நாடு கிடைக்கல, மன்னார்குடி மாமிக்கு அமெரிக்காவே கிடைக்க போவுதுனு நினைத்தோம். அதுக்கும் வாய்ப்பில்லியா.


SUBBU,MADURAI
அக் 26, 2024 14:19

அமெரிக்கா நாட்டு சரித்திரத்தில் ஒரு பெண் இதுவரை அதிபரானது இல்லை இனிமேலும் அப்படித்தான்!


Ravi Prasad
அக் 26, 2024 13:00

Good to see Trump is gaining. America need bold person like Trump


Palanisamy T
அக் 26, 2024 19:30

Trump is not a bold person. Boldness come together with virtues and trait. If reelected the good relationship and security gap between US and NATO nations may go wider. Not good for the future world.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை