உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / எகிப்தில் டிரம்ப் கால் பதிக்கும் முன் ஹமாஸ் வசமுள்ள 20 பிணையக்கைதிகள் விடுவிப்பு; துணை அதிபர் வான்ஸ் தகவல்

எகிப்தில் டிரம்ப் கால் பதிக்கும் முன் ஹமாஸ் வசமுள்ள 20 பிணையக்கைதிகள் விடுவிப்பு; துணை அதிபர் வான்ஸ் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்; எகிப்தில் நடைபெறும் உச்சி மாநாட்டில் டிரம்ப் கலந்து கொள்ளும் முன், ஹமாஸ் வசமுள்ள 20 பிணையக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் கூறியுள்ளார்.பாலஸ்தீனத்தின் காசாவில் 2 ஆண்டுகளாக இஸ்ரேல், ஹமாஸ் இடையே நடைபெற்ற போர் முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த 20 அம்ச திட்டத்தை தொடர்ந்து போர் நிறுத்தம் அமலாகி இருக்கிறது. இதையடுத்து, காசாவின் சில பகுதிகளில் இருந்து இஸ்ரேல் படைகள் திரும்ப அழைக்கப்பட்டன.இந்த சூழலில் காசா அமைதி உச்சி மாநாடு நாளை (அக்.13) எகிப்தில் நடக்கிறது. இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். இந் நிலையில் எகிப்து உச்சி மாநாட்டுக்காக டிரம்ப் அங்கே செல்லும் முன்னதாக, ஹமாஸ் தன் வசம் வைத்துள்ள 20 பிணையக்கைதிகளை விடுவிக்க உள்ளதாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கூறி இருக்கிறார்.அவர் மேலும் கூறியதாவது; உயிருடன் உள்ள 20 பிணையக்கைதிகளை ஹமாஸ் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அவர்கள் அடுத்த 24 மணிநேரத்தில் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய கிழக்கில் உண்மையான அமைதி நிலவும் உணர்வில் உள்ளோம். நிச்சயமாக இந்த 20 பேரும் தங்கள் குடும்பத்தினருடன் வீடு திரும்ப போகின்றனர். அமெரிக்காவிற்கு ,இது ஒரு சிறந்த தருணம் என்று எண்ணுகிறேன். சாத்தியமாக்கிய அமெரிக்க ராஜதந்திரிகளை நினைத்து அமெரிக்கா பெருமைப்பட வேண்டும். உலகிற்கும் இது ஒரு சிறந்த தருணம். எனவே தான் அதிபர் டிரம்பும் அங்கு செல்ல உள்ளார். விடுவிக்கப்பட்ட பிணைக்கைதிகளை சந்திப்பார்.இவ்வாறு துணை அதிபர் வான்ஸ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ