உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா வருகின்றனர் அமெரிக்கா துணை அதிபர் வேன்ஸ், உஷா தம்பதி

இந்தியா வருகின்றனர் அமெரிக்கா துணை அதிபர் வேன்ஸ், உஷா தம்பதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்கா துணை அதிபர் வேன்ஸ், உஷா தம்பதி இந்தியாவில் சுற்றுப்பயணம் வர திட்டமிட்டுள்ளனர்.அமெரிக்கா துணை அதிபராக ஜே.டி.வேன்ஸ், 40, பதவி ஏற்றதை தொடர்ந்து அவரது மனைவி உஷா வேன்ஸ் அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணி ஆகியுள்ளார். உஷா வேன்ஸ், பெற்றோர் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்கள். 2014ம் ஆண்டில் ஜே.டி.வேன்சை கரம் பிடித்த உஷாவுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ் இந்தியாவின் மருமகன் என்பதால் இந்தியர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில், துணை அதிபர் வேன்ஸ், உஷா தம்பதி இந்தியாவுக்கு வர திட்டமிட்டுள்ளனர். இவர்களது இந்திய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அவர்கள் வருகைக்கான தேதி குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.சமீபத்தில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனிக்கு வேன்ஸ் மேற்கொண்ட பயணங்களுக்கு பிறகு, இரண்டாவது அரசு முறை சர்வதேச பயணம் இதுவாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Karthik Masagounder
மார் 12, 2025 19:34

மருமகனா வாந்தால் எல்லாத்தையும் ஆட்டைய போடப்போறாருனு தானே அர்த்தம் அயோ ...மோடி ஜி, பாபு ஜி..உஷார்


Ramesh Sargam
மார் 12, 2025 12:29

இந்த தம்பதியினர் ஆந்திராவுக்கு செல்ல வாய்ப்பிருக்கிறதா? அங்கு காரம் காரமாக ஆவக்காய் ஊறுகாய் சுவைப்பார்களா?


Oru Indiyan
மார் 12, 2025 12:17

ஒரு பயனும் இல்லை


Veluvenkatesh
மார் 12, 2025 12:06

வாங்க மாப்பிளே வாங்க வாங்க. உங்க சமீபத்திய அரசியல் செயல்பாடுகள் சூப்பர். இந்திய கலாசாரத்தை விரும்பும் அனைவரும் நலமுடன் வளமுடன் வாழ்க.


sankaranarayanan
மார் 12, 2025 10:36

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மாப்பிள்ளை வருகிறாரா பொண்ணோட நல்ல வரவேற்புதான் திருப்பதி செல்வார்கள் தப்பித்தவிரி திராவிட மாடல் அரசுபக்கம்மட்டும் வந்துவிடாமல் பார்த்துக்கொள்ளவும் வந்தால் கெட்டுப்போய் விடுவார்கள்


சண்முகம்
மார் 12, 2025 10:31

வான்சுடன் அவரது மனைவிக்கு வரவேற்பு பலமாக இருக்கும்


Gopinathan S
மார் 12, 2025 10:29

இப்போதான் நிம்மதி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை