உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றும்; இஸ்ரேல் பிரதமரை சந்தித்த டிரம்ப் திட்டவட்டம்!

காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றும்; இஸ்ரேல் பிரதமரை சந்தித்த டிரம்ப் திட்டவட்டம்!

வாஷிங்டன்: அமெரிக்காவில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகிய இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசினர். பின்னர், 'காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றும்' என டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்தார்.அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப், கடந்த ஜனவரி 20ல் அதிபராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற உடன், 'தான் அதிபராக இருந்தால், உலகில் போர் நடக்க விட மாட்டேன்' என டிரம்ப் கூறியிருந்தார். இதற்கிடையே, தங்கள் நாட்டிற்கு வருமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9nrckvxt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்த அழைப்பை ஏற்று, பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்கா வந்தடைந்தார். பின்னர் வெள்ளை மாளிகையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகிய இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசினர். அவர்கள் இருவரும் போர் நிறுத்தம், இரு தரப்பு உறவு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினர்.பின்னர், இஸ்ரேல் பிரதமர், டிரம்ப் இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது, டிரம்ப் கூறியதாவது: தேவைப்பட்டால் காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றும். அப்பகுதியில் எங்கள் நாட்டு ராணுவத்தினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவோம். இது மத்திய கிழக்கு பகுதியில் அமைதி சூழலை உருவாக்கும். காசா பகுதியில் உள்ள வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களை அகற்றுவோம். அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்புகள் மற்றும் வீடுகள் ஆகியவற்றை உருவாக்குவோம். இவ்வாறு டிரம்ப் கூறினார்.இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: அதிபர் டிரம்பின் யோசனை வரலாற்றை மாற்றக்கூடிய ஒன்று. காசாவிற்கு ஒரு வித்தியாசமான எதிர்காலத்தைக் கற்பனை செய்கிறார். மத்திய கிழக்கின் புவிசார் அரசியலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

naranam
பிப் 05, 2025 15:55

ஆஃப்கனிஸ்தானில் பெற்ற அனுபவத்தை அமேரிக்கா மீண்டும் காஸாவில் பெறக் கூடும்.


sridhar
பிப் 05, 2025 12:41

டிரம்ப் வாய்க்கு வந்தபடி பேசுபவர். சென்றமுறை பதவியில் இருந்தபோது சொன்னது எதையும் செய்யாதவர் .


தேவராஜன்
பிப் 05, 2025 11:07

டிரம்ப் சாரே, அப்டியே இந்த பாக்கிஸ்தானையும் பங்களாதேஷையும் மண்டையில இரண்டு தட்டு தட்டுங்க.


ஆரூர் ரங்
பிப் 05, 2025 11:02

அனாவசியமாக போர் துவக்கிய அரபிகளது குற்றத்திற்கு இழப்பீடாக காஸா பகுதியை இஸ்ரேல் பிடித்து வைத்திருந்தது. இப்போது அரபு நாடுகளே பாலஸ்தீன விடுதலை பற்றி அலட்டிக் கொள்வதில்லை. நம்ம ஊரு கான்கிராஸ், கம்யூனிஸ்டு ,அர்பன் நக்சல்கள் மட்டுமே முஸ்லிம் வாக்கு வங்கிக்காக அதற்காக குரல் எழுப்பி ஊரை ஏமாற்றுகிறார்கள்.


Barakat Ali
பிப் 05, 2025 10:53

தேன் கூட்டில் கைவைத்தது போலாகும் .......


Haja Kuthubdeen
பிப் 05, 2025 10:26

குரங்கு கையில் கிடைத்த அப்பம் கதைதான்...


shahul
பிப் 05, 2025 10:15

வருகிறது சுடுகாடு திட்டம்


Anand
பிப் 05, 2025 10:46

மூர்க்கம் இருக்கும் இடம் குட்டிச்சுவர் மற்றும் சுடுகாடு கண்டிப்பாக உருவாகும்..


GMM
பிப் 05, 2025 10:11

காஸா பகுதி அமெரிக்கா கைப்பற்றி, சுத்தம் செய்து இஸ்ரேல் வசம் ஒப்படைக்க வேண்டும். எங்கு எல்லாம் தீவிரவாதிகள் பொது மக்களுடன் மறைந்து தாக்குதலில் ஈடுபடுகிறார்களோ, அந்த பகுதியை ராணுவ வலிமையுள்ள நாடுகள் வசப்படுத்த வேண்டும். மக்கள், பாதுகாப்பு படையிடம் அயுதம் உள்ள பல இஸ்லாமியர் நாடுகள் தீவிர வாதம் கட்டுப்படுத்த முடியவில்லை. அங்கு ஜனநாயக நாடுகள் ராணுவம் புகுந்து சீர்செய்ய வேண்டும். இந்த நடவடிக்கை அடுத்த உலக யுத்தம் தவிர்க்க உதவும்.


user name
பிப் 05, 2025 09:10

காசா டிரம்ப் அப்பா வீட்டு சொத்து போல


Kumar Kumzi
பிப் 05, 2025 10:26

காட்டேரி மூர்க்கம் ஒழிந்தால் தான் உலகில் அமைதி ஏற்படும்


Laddoo
பிப் 05, 2025 10:45

கடவுள் அப்பா சொத்துதான். அதை தீவீரவாதிகளிடம் சிக்காமல் காப்பாற்ற போவது அமெரிக்காதான்


Anand
பிப் 05, 2025 10:53

நீங்கள் சொன்னதை காசா தீவிரவாதிகள் அனைவரும் ஒரே குரலில் சொல்லவேண்டும், அப்போது தான் டிரம்ப் உடனடியாக கைப்பற்றுவார்...


saravanan
பிப் 05, 2025 09:05

அதிபர் தேர்தலுக்கு முன்புவரை நாட்டின் தேவையற்ற செலவினங்களை குறைக்க உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு இராணுவ ரீதியான உதவிகளை அமெரிக்கா நிறுத்தும் என்று கூறிக் கொண்டிருந்தவர் இப்போது உலக ஆபத்பாந்தவன் கொள்கையை மீண்டும் கையில் எடுத்திருக்கிறார் வல்லரசாக தன்னை உலகுக்கு காட்டிக் கொள்ளும் முனைப்பில் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி குறைந்தாலும் இதுபோன்ற மத்தியஸ்தங்கள் செய்வதை விடமுடியாது போலிருக்கிறதே


Haja Kuthubdeen
பிப் 05, 2025 17:08

எப்பவுமே அமெரிக்காவிற்கு உலக போலீஸ் நினைப்புதான்...


புதிய வீடியோ