உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவின் இரண்டாம் பெண்மணி ஆனார் இந்திய வம்சாவளி பெண்; யார் இந்த உஷா வேன்ஸ் ?

அமெரிக்காவின் இரண்டாம் பெண்மணி ஆனார் இந்திய வம்சாவளி பெண்; யார் இந்த உஷா வேன்ஸ் ?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: துணை அதிபராக ஜே.டி.வேன்ஸ் பதவியேற்றதால், அவரது மனைவி உஷா வேன்ஸ் அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணி என்ற பெருமையை பெற்றார்.அமெரிக்காவில் அதிபர் மனைவியை நாட்டின் முதல் பெண்மணி என்றும், துணை அதிபர் மனைவியை இரண்டாவது பெண்மணி என்றும் அழைப்பது வழக்கம். தற்போது துணை அதிபராக ஜே.டி.வேன்ஸ், 40, பதவி ஏற்றதை தொடர்ந்து அவரது மனைவி உஷா வேன்ஸ் அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணி ஆகியுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் இத்தகைய பெருமையை பெறுவது இதுவே முதல் முறை.அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப், தனது பதவியேற்புக்கு பிறகு பேசுகையில், ஜே.டி.வேன்ஸ் மனைவி உஷா சிலுகுரி புத்திசாலி என பாராட்டினார்.

யார் இந்த உஷா வேன்ஸ்?

* அமெரிக்கா துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ் மனைவி உஷா சிலுகுரி. இவருக்கு வயது 38.* இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர்கள். 1986ல் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர்.* கலிபோர்னியாவின் சான்டியாகோவில் பிறந்த உஷா, யேல் பல்கலையில் சட்டம் பயின்றார்.* அங்கு அறிமுகமான ஜே.டி.வேன்சை காதலித்து 2014ல் திருமணம் செய்தார்.* 2014ம் ஆண்டில் ஜே.டி.வேன்சை கரம் பிடித்த உஷாவுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். * துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ் இந்தியாவின் மருமகன் என்பதால், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் வாழ்த்து தெரிவித்து, பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Roshan Hilmee
ஜன 23, 2025 15:07

ம் அப்புறம்


Roshan Hilmee
ஜன 23, 2025 15:06

அப்புறம்


Roshan Hilmee
ஜன 23, 2025 15:06

ஹஹ்


Roshan Hilmee
ஜன 23, 2025 15:04

ஹஹ் ஹஹ் ஹா


Roshan Hilmee
ஜன 23, 2025 15:02

இதனால் இந்தியாவுக்கு பெரிய பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். போங்கய்யா


Ambai Lingam
ஜன 23, 2025 09:44

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்ற பெருமை அனைவர்க்கும் உண்டு அவ்வளவே இங்கிலாந்து பிரதமர் அவரின் திருமதி அது போல் ஜீ ன் தலைமுறை பேசும்


KavikumarRam
ஜன 21, 2025 10:44

வாழ்த்துகள். ஆனால் நாம் தான் இந்திய வம்சாவளி என்று பீத்திக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு எல்லாம் இந்திய செண்டிமெண்ட் எதுவும் இருக்கப்போவதில்லை. கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ், கமலா ஹாரிஸ் இப்போ உஷா. இவர்கள் எல்லோரும் நம்மைப்பார்த்து யு பீப்பிள் இண்டியா என்று தான் அழைப்பார்கள். நாம் தான் பொங்கிக்கொண்டு கல்பனா சாவ்லா அவார்டு எல்லாம் இந்தியர்களுக்கு குடுத்து பொங்கல் புளியோதரை எல்லாம் வச்சு பொங்கிக்கிட்டு இருக்கோம்.


Ganesh Subbarao
ஜன 21, 2025 12:33

ஹா ஹா ஹா


Siva Subramaniam
ஜன 21, 2025 10:09

Many Indians born in India are NOT loyal to our country, then how cum many think, that those migrated ones will favor India. Strange thoughts.


Sidharth
ஜன 21, 2025 13:15

because historically we never treated our fellow citizens equally.be it women or the so called low es. thats the root cause for lack of patriotism.Pl read Dr BR.Ambedkar further.


P. SRINIVASALU
ஜன 21, 2025 09:30

ரொம்ப முக்கியம்....


Tiruchanur
ஜன 21, 2025 09:22

ப்ராஹ்மண பெண் அவர்.


Tetra
ஜன 21, 2025 10:26

எப்யடி தெரியும்? சிலுகுரி என்றால் ப்ராம்மணரா? வேறே வேலையே கிடையாதா? எப்பொழுதும் அந்தணர்களை அழிப்பதே உங்கள் வேலையா? அவர் யாராக இருந்தாலும் அமெரிக்கர். இந்தியர்களுக்கு என்றும் சாதகமாக இருக்கப்போவதில்லை. வேண்டவும் வேண்டாம். நாம் நம் நாட்டுக்கு நாணயமாக இருந்தால் போதும். அவர் அமெரிக்காவுக்கு கடன் பட்டவராகத்தான் இருப்பார். அதுவே நல்லது இரு நாட்டுக்கும்.


புதிய வீடியோ