உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஹிந்து கோவிலில் நாச வேலை; அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் அட்டூழியம்

ஹிந்து கோவிலில் நாச வேலை; அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் அட்டூழியம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள ஹிந்து கோவிலில் இந்தியாவிற்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது. காலிஸ்தான் பயங்கரவாதிகள் இந்த நாச வேலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.அமெரிக்காவின் ஜான்சன் கவுண்டியில் உள்ள ஒரு நகரமான இன்டியானாவின் கிரீன்வுட்டில், ஹிந்து பக்தர்கள் அதிகம் வழிபடும் கோவில்கள் உள்ளன. இப்பகுதியில் செயல்படும் காலிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதிகள், போச்சசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா (BAPS) கோவில் சுவர்களில் இந்தியாவிற்கு எதிரான மற்றும் மோடிக்கு எதிரான வாசகங்கள் எழுதி வைத்துள்ளனர்.ஒரு வருடத்திற்குள் நான்காவது முறையாக, இந்த கோவிலில், காலிஸ்தான் பயங்கரவாதிகள் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் குற்றத்தைச் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்துள்ளன. இது குறித்து, அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:சுவாமிநாராயண் சன்ஸ்தா கோவிலின் பிரதான அறிவிப்புப் பலகையை அவமதித்து வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது கண்டிக்கத்தக்கது. துணைத் தூதரகம் உள்ளூரில் வசிக்கும் இந்தியர்களுடன் தொடர்பில் உள்ளது. உடனடி நடவடிக்கைக்காக சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் இந்த விஷயத்தை முறையிட்டுள்ளது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

சண்முகம்
ஆக 14, 2025 06:07

BAPS ஒரு கோயில் இல்லை. சுவாமி நாராயண் எனப்படும் மனிதருக்கு கட்டப்பட்ட மடம்.


venkataraman vs
ஆக 13, 2025 22:08

ஓசி பிரியாணி, ஓசி ரொட்டிக்கு அடிமையானவர்களை வைத்துதான் இந்த பயங்கரவாதிகள் பிழைக்கிறார்கள்.


Ramesh Sargam
ஆக 13, 2025 20:48

கனடாவை அடுத்து இந்த காலிஸ்தான் பயங்கரவாதிகள் இப்பொழுது அமெரிக்காவிலும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகிறார்கள். எது எதற்கோ எச்சரிக்கை விடும் அமெரிக்க அதிபர், இதுபோன்ற பயங்கரவாதிகளை முதலில் அடக்கட்டும் பார்க்கலாம்.


Jack
ஆக 13, 2025 17:28

ஸன்ஹோஸேயில் இருக்கும் குருதுவாரா முழுக்க முழுக்க காலிஸ்தான் ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டில் ..அங்கு இலவச லங்கர் உணவு சாப்பிடுவது இந்தியர்கள்


Easwar Kamal
ஆக 13, 2025 16:56

கனடா உங்கள் ஆட்டம் செல்லுபடி ஆச்சு. அதையே அமெரிக்கா follow பண்ணலாம்னு நினைசீங்கனா அப்பு தாண்டி. அமெரிக்காவில் குஜராத்தி, தெலுங்கன் அப்புறம் தமிழ் அதுக்கு அப்புறம்தாண்டி இந்த சீக்கிய கூட்டங்கள். கண்டிப்பாக trumpan இப்போது இந்திய மேல் சிறுது கோபத்தில் உள்ளார். பாக்கிஸ்தான் வழக்கம்போல சீனா உடன் கை கோர்க்கும் அமெரிக்கா உணர்ந்து இந்திய பக்கம் கண்டிப்பாக vandhae தீரும். மோடி மற்றும் ஜெய்ஷ்ங்கர் இருவரும் மீண்டும் பழைய நட்பை புதுப்பிக்க வழிகளை ஆராய்வார்கள்.


nagendhiran
ஆக 13, 2025 16:53

இதுங்களோடு சில மிச்சங்கள் இங்கு இருப்பதால் அதை நாம் அனுபவித்துதான் ஆகனும்?


ஆரூர் ரங்
ஆக 13, 2025 16:52

சீக்கிய புனித நூலான குரு கிரந்த சாஹிப் புத்தகத்தில் பல நூறு இடங்களில் ராமர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் அறியாமல் தவறு செய்கிறார்கள்