உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வெனிசுலா கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்: 11 பேர் உயிரிழப்பு

வெனிசுலா கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்: 11 பேர் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: வெனிசுலா கடற்கரையில் போதைப்பொருட்கள் கடத்த முயன்ற கப்பல் மீது அமெரிக்க ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதில், 11 பேர் உயிரிழந்தனர்.தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று, வெனிசுலா. அந்நாட்டில் மூன்றாவது முறையாக நிகோலஸ் மதுரோ அதிபராக உள்ளார். இவர், உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராகச் செயல்படுவதாகவும், போதைப்பொருள் கும்பல்களுடன் இணைந்து அமெரிக்காவிற்குள் போதைப் பொருட்களை சப்ளை செய்வதாகவும் கடந்த 2020ம் ஆண்டு அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0emawovh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சமீபத்தில், மதுரோவை கைது செய்வதற்கான சன்மானத்தை டொனால்டு டிரம்ப் அரசு இரட்டிப்பாக்கி 415 கோடி ரூபாயாக அறிவித்தது. இந்நிலையில் வெனிசுலா கடற்கரையில் ஒரு கப்பலின் மீது அமெரிக்கப் படைகள் ராணுவத் தாக்குதல் நடத்தியதில், 11 பேர் கொல்லப்பட்டனர்.வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவுடன் தொடர்புடைய போதைப்பொருள் பயங்கரவாதிகள் சர்வதேச நீர்வழியாக அமெரிக்காவை நோக்கி போதைப்பொருட்களை கொண்டு சென்றபோது அவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக டிரம்ப் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Shivakumar
செப் 03, 2025 11:13

அமெரிக்காவின் அடுத்த டார்கெட் வெனிசூலாதான். வேறு யார் மேலேயும் போர் தொடுக்க முடியாது. ஏமாந்த இளிச்சவாயன் இப்போ வெனிசூலாதான். அமெரிக்காவின் ஒவொவொரு ப்ரெசிடெண்ட் ஆட்சிக்கு வரும்போது எல்லாம் ஏதாவது ஒரு நாட்டை அழிக்கனும் . இல்லையென்றால் அந்த பதவிக்கு அசிங்கம். இப்போ மாட்டியது வெனிசூலா. இந்த லட்சணத்தில் அவருக்கு நோபல் பரிசு வேண்டுமாம்.


Gokul Krishnan
செப் 03, 2025 09:26

முதலை கண்ணீர் போன்றது தான் இது வெனிசுலா நாட்டில் மிக அதிக எண்ணெய் வளம் அது ஒன்று தான் காரணம் போதை பொருள் ஒழிப்பு என்பது எல்லாம் அமெரிக்காவின் வெறும் திருட்டு நாடகம்


Ramesh Sargam
செப் 03, 2025 09:00

இதேபோன்று தமிழகத்தில் போதைப்பொருள் கொண்டுவருபவர்களையும் குண்டு போட்டு முடிக்கவேண்டும்.


Siva Balan
செப் 03, 2025 07:39

தமிழ்நாட்டை போன்று அங்கும் காசுக்காக ஓட்டு போடுவார்கள் போலிருக்கு....


சமீபத்திய செய்தி