உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நேபாளத்தில் வன்முறை: பிரதமர் மோடி வேதனை

நேபாளத்தில் வன்முறை: பிரதமர் மோடி வேதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை மனதை வேதனைபடுத்துகிறது, என பிரதமர் மோடி கூறியுள்ளார்.சமூக ஊடகங்களுக்கு அரசு தடை விதித்த கோபத்தில் நேபாள நாட்டு பார்லிமென்ட் வாயிலை எரித்து மாணவர்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். தலைநகர் காத்மாண்டுவில் நடந்த இந்த கலவரத்தில், 20 பேர் உயிரிழந்தனர். மாணவர்கள் போராட்டம் எதிரொலியால் அந்நாட்டு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்தனர். முன்னாள் பிரதமர்கள், அமைச்சர்கள் தாக்கப்படுகின்றனர். முன்னாள் பிரதமரின் மனைவியை போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். இதனையடுத்து ஆட்சியை ராணுவம் கைப்பற்றி உள்ளது.இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பஞ்சாப், ஹிமாச்சல் சென்று விட்டு திரும்பிய பிறகு, பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவை கூட்டி நேபாளத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினோம். அங்கு ஏற்பட்டுள்ள வன்முறை மனதை வேதனைப்படுத்துகிறது. பல இளைஞர்கள் உயிரிழந்தது என் மனதை மிகவும் வருத்தப்படுத்துகிறது. நேபாளத்தின் ஸ்திரத்தன்மை , அமைதி மற்றும் செழிப்பு ஆகியவை மிக முக்கியமானவை. நேபாளத்தில் உள்ள எனது அனைத்து சகோதர, சகோதரிகளும் அமைதியையும் ஒழுங்கையும் பராமரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

நிக்கோல்தாம்சன்
செப் 10, 2025 05:28

நேபாளத்தை இந்தியாவுடன் சேர்த்து வைப்பார்களா அந்நாட்டு மக்கள் ?


Ramesh Sargam
செப் 10, 2025 01:33

நடப்பு நூற்றாண்டில் பிறந்த குழந்தைகள் முதல், நாளை இடுகாட்டிற்கு செல்லும் முதியவர்கள் வரை சாப்பாடு இல்லாவிட்டாலும், சமூக ஊடகங்கள் இல்லாமல் அவர்களால் இருக்கவே முடியாது. சமூக ஊடகங்களை முறையாக பயன்படுத்தவேண்டும் என்று எச்சரிக்கலாமே ஒழிய, திடீரென்று மொத்தமாக தடை விதித்தால்... கலவரம்தான் வெடிக்கும். நேபாள பிரதமர் மற்றும் ஆட்சியாளர்கள் முட்டாள்தனமாக தடைவிதித்து, மக்களை கொந்தளிக்க செய்து, கலவரத்தில் ஈடுபடவைத்து, அவர்கள் மட்டும் தப்பி வெளிநாடு செல்கிறார்கள். கலவரத்திற்கு காரணமான அவர்கள் முதலில் தண்டிக்கப்படவேண்டும். போராட்டக்காரர்கள் அமைதி காக்கவேண்டும்.


nisar ahmad
செப் 09, 2025 23:29

விரைவில் இங்கும் நடக்கும்


dandanakka
செப் 10, 2025 08:09

நீங்களும் உங்கள் சமூகமும் உருபடாமல் போவதற்கு இந்த மாதிரி சிந்தனை தான் காரணம்


ManiMurugan Murugan
செப் 09, 2025 23:09

இது வேண்டும் என்றே தூண்டப்பட்ட தா ஆக தோன்றுகிறது


ManiMurugan Murugan
செப் 09, 2025 23:07

வளைத்தள சேனல் களை தடை செய்வதால் மாணவர்களுக்கு இழப்பு எதனால் என்று அவர்களிடம் கேட்கவேண்டும் இவை அனைத்தும் சூதாட்டம் என்பதே எனது பதிவு போராட்டம் நடத்துபவர் கள் காரணம் கூற வேண்டும் உள்நாட்டு வளை தளங்களை ஏற்படுத்தி அதனால் நாட்டிற்கு வருமானம் என்பதை வரவேற்கலாம் இது தகாத கலாச்சார கோட்பாடு மற்றும் வேண்டத்தகாத செய்திகளை பரப்பு வது தவறான செயல்களில் ஈடுப் படத்தூண்டுவது என்ற தன்மை உள்ளது இத்தகைய சேனல்களை தடுப்பது நன்று இத்தகைய செயலிகளால் அமெரிக்க நிறுவனங்கள் தான் சம்பாதிக்கின்றனர்


Tamilan
செப் 09, 2025 23:04

மாபெரும் சாதனை. வேதனைதான் இந்தியாவின் உதவியா. இந்தியாவுக்கு என்று காலம்காலமாக ஒரு கடமை இருந்துவந்ததை அந்நியர்களின், வியாபாரிகளின் ஏஜெண்டு மமதையில் மறந்துவிட்டாரோ . இந்துமதத்தை இந்தியாவை பாரதத்தாயை ஒருசிலருக்கு அந்நிய குண்டர்களுக்கு அடகுவைத்துவிட்ட போலி மதவாத கும்பல்


சமீபத்திய செய்தி