உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மாணவர்கள் வருகையை கட்டுப்படுத்துது ஆஸி.,: இந்தியர்களை பாதிக்குமா?

மாணவர்கள் வருகையை கட்டுப்படுத்துது ஆஸி.,: இந்தியர்களை பாதிக்குமா?

கான்பெர்ரா: அடுத்த கல்வியாண்டில் வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா எண்ணிக்கை 2.70 லட்சமாக குறைக்கப்படும் என ஆஸ்திரேலியா அரசு அறிவித்து உள்ளது. இதனால், இந்திய மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.ஆஸி.,யில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் மூலம் அந்நாடு அதிக பணம் சம்பாதித்து வருகிறது. 2022- 23 நிதியாண்டில் மட்டும். இதன் மூலம் அந்நாடு 36.4 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானம் கிடைத்தது. முன்பு வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே அனுமதி அந்நாடு அனுமதி வழங்கி வந்தது. ஆனால், கோவிட் பரவலுக்கு பிறகு ஏற்பட்ட பற்றாக்குறை காரணமாக, விதிமுறைகளை தளர்த்தியது. பிறகு, இந்தியா, சீனா, பிலிப்பைன்சைச் சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் அந்நாட்டிற்கு செல்ல துவங்கினர். இது, அங்கு தொழிலாளர் மற்றும் சம்பளப் பிரச்னையை ஏற்படுத்தியதுடன், ஏற்கனவே இருந்த வீட்டு வாடகை பிரச்னையையும் பெரிதுபடுத்தியது. இதனையடுத்து வெளிநாட்டினர் இடம்பெயர்வை கட்டுப்படுத்துவதற்காக விசா கட்டணத்தை இரு மடங்கு ஆக்கியதுடன், அங்கு வந்தவர்கள் தொடர்ந்து தங்குவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க துவங்கியது.சமீபத்தில் அந்நாடு நடத்திய கருத்துக்கணிப்பு ஒன்றில் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் வருகை காரணமாக வீட்டு வாடகை அதிகரிப்பதுடன், வீடு பிரச்னைகள் அதிகரிப்பதாக அந்நாட்டு மக்கள் கவலை தெரிவித்தனர். அடுத்த ஓராண்டிற்குள் அந்நாடு தேர்தலை சந்திக்க உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் பல நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது, 2025ம் ஆண்ட முதல் வெளிநாட்டு மாணவர்கள் விசாவினை 2.70 லட்சமாக குறைக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.இது குறித்து அமைச்சர் ஜேசன் கிளாரே கூறியதாவது: ஆஸி., பல்கலையில் தற்போது படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை, கோவிட் காலத்திற்கு முன்பு இருந்ததை விட 10 சதவீதம் அதிகம். தனியார் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் 50 சதவீதம் பேர் கூடுதலாக உள்ளனர். தற்போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் வெளிநாட்டு மாணவர்கள் துறையை சிறந்ததாகவும், நேர்மையானதாகவும் மாற்றும்

இந்தியர்கள் நிலை

ஆஸ்திரேலியாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையில் இரண்டாவதாக இந்தியர்கள் உள்ளனர். 2022ம் ஆண்டில் அந்நாட்டு பல்கலைகழகங்களில் 1,00,009 மாணவர்கள் படித்த நிலையில் 2023ம் ஆண்டு 1,22,000 மாணவர்கள் படித்து வருகின்றனர். தற்போது ஆஸி., அரசின் முடிவு காரணமாக இந்திய மாணவர்களை பாதிக்கும் அபாயம் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை