உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உயர்கல்விக்கு பிரிட்டன் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது

உயர்கல்விக்கு பிரிட்டன் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: இந்தியாவில் இருந்து உயர்கல்விக்காக பிரிட்டன் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இது அந்நாட்டு பல்கலைக்கழகங்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.இந்தியாவில் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. பல வெளிநாட்டு பல்கலைகளும், இந்திய மாணவர்களுக்காக பல்வேறு சலுகைகளை அறிவிக்கின்றன. அந்த வகையில், உயர்கல்விக்கு விருப்பமான நாடாக பிரிட்டன் திகழ்ந்தது.ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பிரிட்டன் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது அந்நாட்டு அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது.இது தொடர்பாக பிரிட்டன் புள்ளி விவரத்துறை அலுவலகம் வெளியிட்ட தகவலில் கூறியுள்ளதாவது: 2024 ம் ஆண்டு கல்வி பயில்வதற்காக 1,10,006 விசாக்கள் வழங்கப்பட்டன. இதில் 25 சதவீதம் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டது. 2019 முதல் 2023 வரை இந்தியர்கள் மற்றும் நைஜீரியர்களுக்கு அதிகளவில் விசா வழங்கப்பட்டது. தற்போது,பிரிட்டன் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை 23 சதவீதம் குறைந்துள்ளது.இது அந்நாட்டு பல்கலைக்கழகங்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. வருவாய் குறைந்து விடும் என்ற கவலை உள்ளதால், அதனை எப்படி சமாளிப்பது, பிரச்னையை எப்படி தீர்ப்பது என்பது குறித்து அவை யோசித்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

pattikkaattaan
ஆக 25, 2024 23:30

பணம் பிடுங்க என்றே அங்கு பல கல்லூரிகள் செயல்படுகின்றன. வேலையும் கிடைப்பதில்லை எதற்கு அங்கு போகனும்


சிந்தனை
ஆக 23, 2024 21:30

பிரிட்டனில் ஒரு பாகிஸ்தான் உருவாகும் நேரம் இப்போது போகாமல் இருப்பதே நல்லது


Gurumurthy Kalyanaraman
ஆக 23, 2024 19:39

அங்கு ஒரு பல்கலை கழகமும் கேம்பஸ் இந்தெர்விவ் ஏற்பாடு செய்வது இல்லை. வேலையும் கிடைப்பது இல்லை. வெறும் பணம் பிடுங்குவது மட்டுமே குறியாக இருக்கிறது. இப்படி இருந்தால் எதற்காக அங்கே போக வேண்டும்?


அப்புசாமி
ஆக 23, 2024 15:38

கெவுனர் பேச்சைக் கேட்டு எல்லோரும் சம்ஸ்கிருதத்திலேயே படிக்க ஆரம்பிச்சிட்டாங்களாம். அந்நிய அடையாளங்களை விரைவில் அழிச்சிடுவோம்.


சமூக நல விரும்பி
ஆக 23, 2024 14:33

அதற்கான காரணம் என்ன என்று தெரிந்து கொண்டு அதை முதலில் சரி செய்ய வேண்டும்


M Ramachandran
ஆக 23, 2024 14:15

பழய மாதிரி இந்திரா காந்தி காலம் போல் நாம் உள்ளேயா புக வேண்டியதுள்ளது. இஙகுள்ள முஸ்லீம் ஓட்டுகளுக்கா கையேயானதும் பிந்தங்கிகள் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? அவர்களது இப்போ துடிக்க வில்லை. தூங்கி கொண்டிருக்கிறது. தமிழா தட்டி எழுப்பு என்று கூவினால தான் குரல் மேலே எழும்புமோ


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை