உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா - பாகிஸ்தான் அசைவுகளை தினமும் கண்காணிக்கிறோம்; அமெரிக்கா

இந்தியா - பாகிஸ்தான் அசைவுகளை தினமும் கண்காணிக்கிறோம்; அமெரிக்கா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலுக்குப் பிறகு, இருநாடுகளின் ஒவ்வொரு அசைவுகளையும் கண்காணித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து பாகிஸ்தான் அத்துமீறிய நிலையில், அந்நாட்டின் விமானப்படை தளங்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில் மிரண்டு போன பாகிஸ்தான், தாக்குதலை நிறுத்தும்படி கெஞ்சியது. இதற்கு இந்தியா சம்மதித்ததால் இந்தப் போர் முடிவுக்கு வந்தது.ஆனால், இந்த தாக்குதலை நான் தான் நிறுத்தினேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இதனை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது. இருப்பினும், டிரம்ப் அதில் பிடிவாதமாக இருந்து வருகிறார். இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான நிலைமையை ஒவ்வொரு நாளும் உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கே ரூபியோ கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது; நீண்ட மோதலுக்குப் பிறகு, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தம் ஏற்பட்டது. அதன்பிறகு, இருநாடுகளுக்கு இடையேயான சூழலை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இதேபோல, கம்போடியா -தாய்லாந்து இடையேயான சூழலையும் கண்காணித்து வருகிறோம். ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் நிறுத்தம் அமலுக்கு வர வேண்டுமானால், இருநாடுகளும் தாக்குதலை கைவிட வேண்டும். ஆனால், ரஷ்யா இதற்கு உடன்படவில்லை. தற்போதைய மற்றும் எதிர்காலங்களில் மோதல் ஏற்படாமல், நிரந்தரமான அமைதியை விரும்புகிறோம். தற்காலிக நிறுத்தத்தை விரும்பவில்லை, எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

veeramani
செப் 08, 2025 09:03

ஒரு விபரம் புரியவில்லை.. இந்திய பகிஸ்தானின் அசைவுகளை கண்காணிக்க அமெரிக்க என்ன செய்கிறது தீவிர ஆதங்களையும் தீவிர வாதிகளையும் பணஉதவி செய்து வளர்கின்ற பாகிரஸ்தானை அமெரிக்க என்ன கேள்வி கேட்கிறது. ஒசாமா பின் லாடன் போன்ற கொடூரமான தீவிரவாதியை ஆதரித்து ராணுவ பாதுகாப்பு கொடுத்த பாகிரஸ்தானை துவசம் செய்து திவசம் அல்லவா கொடுக்கவேண்டும் அதை விட்டுட்டுவிட்டுட்டு பண உதவி செய்வது கபட நாடகம் அல்லவா முதலில் உலக நாடுகள் அமெரிக்காவை வெறுத்து ஒதுக்கவேண்டும்


Ganesh
ஆக 19, 2025 20:34

பண்ணுங்க பண்ணுங்க.... ஆனா நாங்க தயார் பண்ற பெரிய ஆப்பை பாக்கலைல.... அப்படியே எங்களை பார்த்துகிட்டே அப்படியே கீழ உட்காருங்க.... பார்ப்போம்...


Chandrasekaran Balasubramaniam
ஆக 18, 2025 21:37

நீங்க யாருடா எங்களை கண்காணிக்க.


Sun
ஆக 18, 2025 18:30

மூனீர்னு ஒருத்தர் உன் நாட்டுக்குள்ள வந்து விலாப் புடைக்க இரண்டு முறை நீ வச்ச விருந்த சாப்பிட்டுட்டு பாதி உலக நாடுகளை அழிச்சிருவேன்னு மிரட்டிட்டு போறார் அவரை முதல்ல கண்காணிங்க...


Nathan
ஆக 18, 2025 18:25

அவர் கூலிக்கு மாரடிப்பவர் , நீங்கள் பணக்கொளுப்பு எடுத்தவர்கள் இரண்டு பேர்களையும் எப்படி அடிச்சா உரைக்கும் என்று எங்களுக்கு நன்றாக தெரியும்.


Sridhar
ஆக 18, 2025 15:18

சரி, அவ்வளவு கண்காணிக்கறீங்க இல்ல, அப்போ அங்க நடக்குற தீவிரவாத அமைப்புகள் செயல்பாட்டுகளையும் சேர்த்தே கண்காணிங்களேன் நிஜமாலுமே கண்காணிச்சு உண்மையான அறிக்கை கொடுத்தீங்கன்னா, உலகத்துக்கே என்ன நடக்குதுன்னு தெளிவா தெரியுமில்ல? அணு ஆயுதத்தை வச்சு பாதி உலகத்தை அழிச்சிருவோம்னு உங்க நாட்டுக்குள்ளே உக்காந்துகிட்டு ஓப்பனா பேசுறான். அந்த அளவுக்கு பொறுப்பில்லாதவன் கையில அந்த ஆயுதங்கள் இருக்கலாமா? ஒரு ஈரான் அணுஆயுதம் வச்சிருக்கக்கூடாதுனா, பாக்கிஸ்தான் மட்டும் என்ன வித்தியாசம்? ஒருவேளை அங்கே இருக்குற ஆயுதங்கள் எல்லாம் உங்களோடதுதானோ? ஆனா பாகிஸ்தானோட பிசினெஸ் வச்சிருக்கிற உங்கள்ட்ட நேர்மைய எதிர்பாக்குறது சிரமம்தான்.


KavikumarRam
ஆக 18, 2025 14:59

போடா போய் உன் பிரச்சினையை பாரு. நீ கண்காணிச்சிக்கிட்டு இருக்கும் பொது தான் நாங்க போக்ரான்ல அணுகுண்டு சோதனை நடத்தினோம். இப்போ ஆப்பரேஷன் சிந்தூர்ல சைனாக்காரன் முன்வாசல் வழியாவும் நீ போறவாசல் வழியாவும் அவர்ங்களுக்கு சப்போர்ட் பண்ணும்போதும் நாங்க அடிச்சு தூள் பண்ணி அந்த அதுங்களை எங்க கால்ல விழவைச்சோம்.


Sudha
ஆக 18, 2025 13:26

ம்ம் அப்புறம்?


Krishna Gurumoorthy
ஆக 18, 2025 12:30

இவர்களை யார் கண்காணிப்பு செய்ய சொன்னது???? இவர்கள் வேலையை பார்க்க சொல்லுங்கள்


Ramesh Sargam
ஆக 18, 2025 12:13

முதலில் உங்கள் நாட்டில் துப்பாக்கி ஏந்தி அடுத்து யாரை சுட்டுக்கொள்ளலாம் என்று திரியும் நபர்களின் அசைவுகளை கண்காணிக்கவும்.


சமீபத்திய செய்தி