உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சொன்ன சொல்லை காப்பாற்றியுள்ளோம்; முதல்வர் ஸ்டாலின்

சொன்ன சொல்லை காப்பாற்றியுள்ளோம்; முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' பல தடைகளை கடந்து சொன்ன சொல்லைக் காப்பாற்றி உள்ளோம், '' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னையில் இன்று நிருபர்களை சந்தித்த தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர், கோவி செழியன் ஆகியோர் திமுக அளித்த வாக்குறுதிகள், நிறைவேற்றம், தமிழக அரசின் நிதி நிலைமை குறித்து பேட்டி கொடுத்தனர். அப்போது தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் 404 செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளதாகவும், 4 ஆண்டுகளில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர்.இந்நிலையில், ஜெர்மனி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சொன்னதையும் செய்திருக்கிறோம்; சொல்லாததையும் செய்திருக்கிறோம்!திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறிய 505 வாக்குறுதிகளில், நமது அரசு 364 வாக்குறுதிகளை நிறைவேற்றி, 40 வாக்குறுதிகள் பரிசீலனையில் உள்ளதைத் தக்க ஆதாரங்களோடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர், கோவி செழியன் ஆகியோர் விளக்கியுள்ளனர்.இன்னும் ஒருபடி மேலே சொன்னால், காலை உணவுத்திட்டம், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படாதவை!முந்தைய ஆட்சியின் பத்தாண்டுகால நிதி நிர்வாகச் சீர்கேடு, கொரோனா நெருக்கடி, தமிழகத்தை வெல்ல முடியாத பாஜ அரசின் ஓரவஞ்சனை போன்ற தடைகளைக் கடந்து, சொன்ன சொல்லைக் காப்பாற்றியுள்ளோம்!AccessibilityAccountabilityTransparencyInclusivityResponsibilitySustainability இதுதான் தி.மு.க.! இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

Chandru
செப் 03, 2025 12:18

Get out sudalai. You are the worst CM tamilnadu ever had


Durai Kuppusami
செப் 03, 2025 10:15

ரெண்டுமே தத்தியாக இருந்தா நாடு உருப்படுமா அந்த மாதிரிதான் இதுவும்...


surya krishna
செப் 03, 2025 05:28

அண்ணாச்சி தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் என்னாச்சி


Kasimani Baskaran
செப் 03, 2025 04:13

டெவெலப்மென்ட் டெவெலப்மென்ட் டெவெலப்மென்ட் - யாருக்குன்னு கேட்கக்கூடாது...


Ramesh Sargam
செப் 03, 2025 00:20

அப்படியா, முன்றைய தேர்தலுக்கு முன்பு கொடுத்த பூரண மதுவிலக்கு வாக்குறுதியை, அதாவது சொன்ன சொல்லை காப்பாற்றி நிறைவேற்றினீர்களா...? அப்படி என்றால் தமிழகத்தில் எங்கும் டாஸ்மாக் கடைகள் இல்லையா? என்னப்பா உளறுகிறீர் ... நேற்றுகூட பார்த்தேன் இரவு பத்து மணிக்கு பல டாஸ்மாக் கடைகள் திறந்து படுஜோராக வியாபாரம் செய்துகொண்டிருப்பதை. வாயை திறந்தாலே பொய்தானா...? வீட்டில் எப்படி? வீட்டிலும் பொய்தான் பேசுவீர்களா ...?


ஆரூர் ரங்
செப் 02, 2025 22:31

சொன்ன சொல் முதல் கையெழுத்தில் நீட் ஒழிந்து விடும். பேனாவில் மை தீர்ந்து விட்டதால் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்ட வாக்குறுதி.


Svs Yaadum oore
செப் 02, 2025 22:13

குஜராத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் எண்ணெய் கிடைப்பதற்காக, திருப்பூர் ஏற்றுமதியாளர்களை பரிதவிக்க விட்டு விட்டார்களாம் .....அந்த குஜராத் ஜாம் நகர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தமிழ் நாட்டை சேர்ந்தவன் எத்தனை பேர் வேலை பார்க்கிறான் என்று விடியலுக்கு தெரியுமா ??.....இதற்கும் மேல் சூரத் அஹ்மதாபாத்தில் எத்தனை லட்சம் தமிழர்கள் தமிழ் சங்கங்கள் அங்கு உள்ளது என்று விடியலுக்கு தெரியுமா?? .....அவனுங்களுக்கு எல்லாம் விடியல் தமிழ் நாட்டில் வேலை கொடுக்க சொல்லு ??...திராவிட மூடனுங்க ...


ராமகிருஷ்ணன்
செப் 02, 2025 21:45

இதுவு‌ம் புளுகு ராசாவின் புது புளுகு. மனசாட்சியே இல்லையா. கற்பனை ஆட்சி விளம்பர ஆட்சி செய்கிறார்


நிக்கோல்தாம்சன்
செப் 02, 2025 21:32

யாருக்கு சொன்ன சொல்லை ? 30000 கோடிக்கு எத்தணை சைபர் என்று யோசித்து கொண்டுள்ளேன்.


திகழ்ஓவியன்
செப் 02, 2025 21:29

குஜராத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் ரஷ்ய கச்சா எண்ணெய் கிடைப்பதற்காக, பல ஆயிரம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் எங்கள் ஏற்றுமதியாளர்களை நீங்கள் பரிதவிக்க விடுவது எந்த விதத்தில் நியாயம்?” என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்க அரசின் 50 சதவீத வரிவிதிப்பால் பாதிப்புக்குள்ளாகி உள்ள திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களை கண்டுகொள்ளாமல் விட்டதாக மத்திய பாஜக அரசைக் கண்டித்து திமுக கூட்டணி சார்பில் திருப்பூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து, 'மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கண்டன ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றி' என்று குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “பிரதமர் மோடி அவர்களே... தாங்கள் ஆதரித்த ட்ரம்ப் விதித்துள்ள அமெரிக்க வரிவிதிப்பு காரணமாக, தமிழக இளைஞர்களுக்கும், இந்தியாவின் பல மாநிலத் தொழிலாளர்களுக்கும் வாழ்வளிக்கும் டாலர் சிட்டி திருப்பூர் தவிக்கிறது


ஆரூர் ரங்
செப் 02, 2025 22:20

பாவம்.. ஸ்டாலின் நம் பிரதமரை விட அமெரிக்க அல்லேலூயா ஜனாதிபதியை அதிகமாக நம்புகிறார். நம்மைவிட அதிக ரஷ்ய எ‌ரிபொரு‌ள் இறக்குமதி செய்யும் சீனா EU நாடுகளின் மீது எடுக்காத நடவடிக்கையை நம் மீது எடுப்பது அமெரிக்காவின் ஆபத்தான விவசாய பால் பொருட்களை இறக்குமதி செய்ய மறுப்பதால்தான். உங்க கற்பனை கேள்விக்கு இதுதான் பதில்.


ஆரூர் ரங்
செப் 02, 2025 22:35

சென்னை CPCL மங்களூர் Refinery மத்திய அரசின் HP, இந்தியன் ஆயில் கூட ரஷ்ய எண்ணெய்யை இறக்குமதி செய்கிறார்கள். இதெல்லாம் நாட்டின் இறக்குமதியில் 66 சதவீதம். இதெல்லாம் புரிந்தால் விடியல் எங்கோ இருப்பார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை