உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உக்ரைன் போரில் நினைத்ததை சாதிப்போம்: ரஷ்ய அதிபர் புடின் உறுதி

உக்ரைன் போரில் நினைத்ததை சாதிப்போம்: ரஷ்ய அதிபர் புடின் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாஸ்கோ: 'உக்ரைன் போரில் நாங்கள் நிர்ணயித்த இலக்குகள் அனைத்தையும் அடைந்தே தீருவோம்,' என்று ரஷ்ய அதிபர் புடின் உறுதிபட தெரிவித்துள்ளார்.கடந்த 2022, பிப்ரவரியில் மாஸ்கோவுடன் நான்குலுகான்ஸ்க், டொனெட்ஸ்க், சபோரிஜியா மற்றும் கெர்சன் ஆகிய உக்ரைன் பகுதிகளை இணைத்தது. இந்த இணைவுகளின் மறு ஒருங்கிணைப்பு நாளின் இரண்டாவது ஆண்டு நிறைவு விழா நடந்தது. இந்நிகழ்ச்சி குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று பேசிய வீடியோ வெளியாகி உள்ளது.அவர் பேசியதாவது:ரஷ்ய படையினர், உக்ரைனில் மூன்று ஆண்டுகளாக போரிட்டு வருகின்றனர். இந்த மோதலில், நாங்கள் நிர்ணயித்த அனைத்து இலக்குகளையும் அடைந்தே தீருவோம். உண்மை எங்கள் பக்கம் உள்ளது. நாங்கள் நினைத்ததை சாதிப்போம்.புதிய -நாஜி சர்வாதிகாரத்திற்கு எதிராக ரஷ்ய மொழி பேசுபவர்களை பாதுகாப்பதற்காகவே, உக்ரைனுக்குள் படைகளை அனுப்பினோம்.இவ்வாறு அந்த வீடியோவில் புடின் பேசியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

வ்ளாடிமீர் குமார்
செப் 30, 2024 22:33

இந்தப் போர் இல்லேன்னா புட்டினுக்கு பொருளாதாரமே இல்லை. புட்டின் அரசின் போர்க்கால செலவுகளால்தான் நாடே ஓடிக்கிட்டிருக்கு. மேலை நாடுகள் புட்டினை பொருளாதார ரீதியாக வீழ்த்த நினைக்கின்றன. அதனால்தான் போரை தொடர்கிறார்கள். புட்டின் விழுவது நிச்சயம். அப்புறம் ரஷ்யாவின் இயற்கை வளங்களை அடகு வெச்சு இவிங்க சாப்புடுவாங்க.


Easwar Kamal
செப் 30, 2024 19:42

ட்ரம்பன் அதிபர் ஆனால் கண்டிப்பாக உக்ரைன் உங்களிடம் சரணடைய சொல்லி உக்ரெயின் முழுவதும் உங்கள் கையில். இதை தான இந்தியா, சீனா போன்ற நாடுகள் விரும்புகிறது. கமலா ஹாரிஸ் வந்தால் இந்த போர் தொடரும். பார்க்கலாம் என்ன நடக்க போகுது என்று அடுத்த வருடம் தெரிய வரும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை