உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இனி ஒரு பயங்கரவாத தாக்குதல் நடக்க விடமாட்டோம்: ஆஸி பிரதமர் திட்டவட்டம்

இனி ஒரு பயங்கரவாத தாக்குதல் நடக்க விடமாட்டோம்: ஆஸி பிரதமர் திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சிட்னி: ஆஸ்திரேலியா மண்ணில் இனி ஒரு பயங்கரவாத தாக்குதல் நடக்க விடமாட்டோம்; நாடு முழுவதும் துப்பாக்கியை திரும்ப பெறும் பணி தொடங்கப்படும் என ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பாண்டை கடற்கரையில், கடந்த 14ம் தேதி ஹனுக்கா என்ற யூத பண்டிகையின்போது பொதுமக்கள் மீது இருவர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 16 பேர் உயிரிழந்தனர்; 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது பயங்கரவாத தாக்குதல் என்றும், துப்பாக்கிச் சூடு நடத்தியது சாஜித் அக்ரம், 50, மற்றும் அவருடைய மகன் நவீத் அக்ரம், 24, என, தெரியவந்தது. போலீசார் நடத்திய பதிலடி தாக்குதலில், தந்தை சாஜித் அக்ரம் சுட்டுக் கொல்லப்பட்டான். நவீத் அக்ரம் பிடிபட்டுள்ளான். அவன் மீது கொலை உள்ளிட்ட 59 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

துப்பாக்கச்சூடு நடத்த பயிற்சி

தற்போது அவனிடம் விசாரணை நடந்து வருகிறது. விசாரணையில் ஒரு புதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய இருவரில் இளையவரான நவீத் அக்ரம் துப்பாக்கி கையாளுதல் குறித்து விரிவான பயிற்சி பெற்றதாக சிட்னியை தளமாகக் கொண்ட துப்பாக்கி கிளப்பின் தலைவர் தெரிவித்தார். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர்.

ஆஸி பிரதமர் அறிக்கை

இந்நிலையில் ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஆஸ்திரேலியாவில் அதிக துப்பாக்கிகள் உள்ளன. இதைத் தொடர நாம் அனுமதிக்க முடியாது. குடியுரிமை இல்லாதவர்களுக்கு துப்பாக்கி வைத்திருக்க அனுமதி இல்லை. மேலும், சிட்னியின் புறநகர்ப் பகுதியில் வசிப்பவர் ஒருவருக்கு ஆறு துப்பாக்கிகள் வைத்திருக்கவும் தேவையில்லை.கடந்த வார இறுதியில் நடந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒருவருக்கு அப்படித்தான் துப்பாக்கிகள் கிடைத்துள்ளன. ஆஸ்திரேலியா மண்ணில் மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடத்த விட மாட்டோம் துப்பாக்கியை திரும்ப பெறும் திட்டம் விரைவில் தொடங்கப்படும். ஆஸ்திரேலியர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கத் தேவையான அனைத்தையும் நாங்கள் செய்வோம்.பயங்கரவாத தாக்குதல் விசாரணைக்காகப் பணியாற்றும் ஒவ்வொரு போலீஸ் அதிகாரிக்கும் நன்றி. எங்கள் ஆஸ்திரேலிய போலீசார், இந்தச் சம்பவம் எப்படி நடந்தது என்பதைத் துல்லியமாகக் கண்டறியவும், ஆஸ்திரேலியர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் ஆதாரங்களை ஆராய்ந்து வருகிறது. இவ்வாறு அந்தோனி அல்பானீஸ் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Nathansamwi
டிச 19, 2025 17:40

ஆமை புகுந்த வீடும் , அமைதி குரூப்ஸ் புகுந்த நாடும் சர்வ மாசம் தான் ...


SRIRAM
டிச 19, 2025 13:26

உடனே நாடு கடத்தவும்.....


Rajah
டிச 19, 2025 13:11

உலக நாடுகள் அனைத்தும் விழித்துக்கொள்ள வேண்டிய காலம் இது.


Ramesh Sargam
டிச 19, 2025 12:48

இது வெறும் ஒரு ஆவேசப்பேச்சாக மட்டும் இருக்க கூடாது மதிப்புக்குரிய ஆஸி பிரதமர் அவர்களே. நடைமுறையில் செயல்படுத்தவேண்டும். இந்தியா போன்ற பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட நாடுகளுடன் ஒன்றிணைந்து, உலகில் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கும் இடங்களில், குறிப்பாக பாகிஸ்தானில், கடுமையான தாக்குதல் நடத்தி, அவர்களை முற்றிலும் அழிக்கவேண்டும் உலகில் அமைதி நிலைநாட்டப்படவேண்டும். அடுத்து அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் அரசியல்வாதிகளையும் கூண்டோடு அழிக்கவேண்டும்.


Senthoora
டிச 19, 2025 15:41

இதே ஆவேச பே ச்சை பேசியவர்கள் இப்போ டில்லி தாக்குதளையும் பார்த்துவிட்டார். இனொரு படைத்தளபதி ஹெலிகாப்டர் போகும்போது கொல்லப்பட்டார், இன்னும் எப்படி ன்று முடிவு இல்லை,


Suresh
டிச 19, 2025 12:31

மோடிஜி போன்ற ஒரு கர்மவீரர் நாட்டிற்கு கிடைப்பது மிக மிக அரிது.


RK
டிச 19, 2025 12:29

மூர்க்கத்திற்கு இடம் கொடுத்தால் இதுதான் நிலைமை. வாடகைக்கு வீடு கூட கொடுக்க பயம்தான்.


தியாகு
டிச 19, 2025 12:05

தேர்தல்கள் வந்தால் ஓட்டுக்காக கட்டுமர திருட்டு திமுக மாதிரி மூர்க்க கும்பல்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டியது, அவன் குண்டு வைத்ததும் ஐயோ அம்மா என்று கூப்பாடு போடவேண்டியது, வளர்ந்த நாடுகளுக்கு இதுவே வாடிக்கையாகிவிட்டது.


அசோகன்
டிச 19, 2025 12:04

இது 65 ஆண்டுகளாக காங்கிரஸ் இந்திய மக்களுக்கு சொன்னதை. போலீஸ் இயந்திர துப்பாக்கிகளோடு இருந்தும் எதையும் செய்யாமல் வேடிக்கை பார்த்தது ஏன்


Senthoora
டிச 19, 2025 15:45

அதுக்கு பின் வந்தவர்கள் என்னத கிழிச்சாங்க காங்கிரஸ் ஆட்சிக்கு பின்தான் இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் அதிகம்.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 19, 2025 09:38

இனி ஒரு பயங்கரவாத தாக்குதல் நடக்க விடமாட்டோம்.. இப்படி பாரதம் சொல்ல முடியுமா >>>>


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 19, 2025 09:02

அப்போ மூர்க்கம் தலையெடுக்க விடமாட்டீங்களா >>>>


முக்கிய வீடியோ