உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கச்சத்தீவை தரமாட்டோம்: இலங்கை அமைச்சர் உறுதி

கச்சத்தீவை தரமாட்டோம்: இலங்கை அமைச்சர் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொழும்பு: “கச்சத்தீவை இந்தியாவுக்கு விட்டுத்தரும் எண்ணம் இல்லை,” என இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹெராத் கூறியுள்ளார்.நமக்கும், அண்டை நாடான இலங்கைக்கும் இடையே மீனவர் பிரச்னை தொடர்கதையாக உள்ளது. கச்சத்தீவு மற்றும் பாக் நீரிணை அருகே மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்கிறது. படகுகளை பறிமுதல் செய்கிறது. சில சமயங்களில் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் நடக்கின்றன.இதில், தற்போது இலங்கை வசம் உள்ள மக்கள் வசிக்காத கச்சத்தீவு, கடந்த 1974ல் பிரதமராக இருந்த இந்திராவின் காங்கிரஸ் ஆட்சியில், கடல்சார் ஒப்பந்தத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்டது.கச்சத்தீவை மீட்க வேண்டும் என தமிழக கட்சிகள் தொடர்ந்து கோரி வருகின்றன. 'மீன்பிடி உரிமைகளை விட்டுத் தந்ததே தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்னைக்கு காரணம்' என, நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறி வருகிறார்.இந்நிலையில், மீனவர் பிரச்னை குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹெராத், “மீனவர் பிரச்னையை தீர்க்க நாங்கள் துாதரக அளவிலான பேச்சுக்கு தயாராக உள்ளோம். ''ஆனால், இலங்கையின் கச்சத்தீவை விட்டுக் கொடுக்க ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டோம் என்பது உறுதி. அது, சர்வதேச சட்டத்தால் நிறுவப்பட்டது,” என கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

RRR
ஜூலை 05, 2025 11:38

இந்திராவும் கருணாவும் சேர்ந்து தமிழர்களுக்கு செய்த மாபெரும் துரோகத்திற்கான வினையை இப்போது அனுபவிக்கிறோம்...


Rajah
ஜூலை 05, 2025 11:14

சண்டைக்கு வரமாட்டார்கள் ஆனால் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள முக்கிய துறைமுகங்களை சீனாவுக்கு கொடுத்து விடுவார்கள். இது இந்தியாவின் பாதுகாப்புக்குக்கு ஆபத்தாக முடியும். கச்சை தீவை கொடுக்கும் முன்னர் இவற்றையெல்லாம் யோசித்திருக்க வேண்டும். இரு நாடுகளும் சேர்ந்து எல்லை தாண்டாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசித்து ஒரு தீர்மானம் எடுக்க வேண்டும். காங்கிரஸ் மாதிரி முடிவெடுக்காமல் இந்தியாவின் நலன் கருதி நல்ல முடிவு எடுக்க வேண்டும். சாத்தியமாகாது ஒரு விடயத்தை சாத்தியமாக்குவோம் என்று வீரம்பேசி மக்களை ஏமாற்ற வேண்டாம். மூக்கை நேரில் தொடாமல் கேரளா, கர்நாடக, தெலுங்கானா, ஆந்திர போய் வந்து இதுதான் தமிழ் என்று சொல்ல முனையாதீர்கள்.


Pandi Muni
ஜூலை 05, 2025 10:57

கச்ச தீவையும் வாங்குவோம் கருணாநிதி கும்பலையும் காலி பண்ணுவோம்


ஆரூர் ரங்
ஜூலை 05, 2025 10:19

மீனவர்கள் பிரச்சினைக்கும் கச்சத்தீவுக்கும் சம்பந்தமே கிடையாது. பேராசையால் எல்லை தாண்டி போய் சுருக்கு, இரட்டை மடி வலைகள் மூலம் மீன்குஞ்சுகளையும் கூட அள்ளி திருடுகிறார்கள். இதனால் பாதிக்கபடுவது வடஇலங்கை ஏழை தமிழ் மீனவர்களே. அவர்களது கட்டுமரங்கள் நம்மூர் அதிவேக விசைப்படகுகளுடன் போட்டியிட முடியாது. இலங்கைக் கடற்படை மீன்திருட்டுக்கு கடும் தண்டனை விதிப்பது சூப்பர்.


Bhakt
ஜூலை 05, 2025 10:19

எல்லாம் இந்த காங்கிரஸின் நண்பன் சப்பை மூக்கன் சீனாக்காரன் செய்ற சில்மிஷ வேலை தான்


GMM
ஜூலை 05, 2025 10:16

இலங்கையின்? கச்சத்தீவை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்பது உறுதி. சர்வதேச சட்டத்தால் நிறுவப்பட்டதாம். எந்த சட்டமாக இருந்தாலும், விலை கொடுத்து வாங்கியது மட்டும் தான் செல்லும். இனாமாக, ஆக்கிரமிப்பு மூலம் பெறபடும் நில பகுதிக்கு என்றும் உரிமை கொண்டாட முடியாது. இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி.?


venugopal s
ஜூலை 05, 2025 09:33

மத்திய பாஜக ஆட்சியில் பிள்ளைப் பூச்சிக்கு கூட கொடுக்கு முளைத்து விட்டது! என்ன கண்றாவி ஆட்சியோ?


Bhakt
ஜூலை 05, 2025 10:16

நைனாவோட நைனா கச்சத்தீவை வித்த ரசீது கிடைத்தால் அந்த பணத்தை திரும்ப கொடுத்து விட்டு கச்சத்தீவை திரும்ப வாங்கிக்கலாம்.


Ragupathy
ஜூலை 05, 2025 08:42

யானைக்கும் அடி சறுக்கும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்திரா அம்மையார். எமர்ஜென்சி... கச்சத்தீவு எதற்காக இலங்கைக்கு கொடுத்தார்...


Saravanan Gurunathan
ஜூலை 05, 2025 08:34

ரொம்ப ஆடாதடா, சிந்து நதி ஒப்பந்தம் ரத்து செஞ்ச இந்தியா கச்ச தீவு ஒப்பந்தம் ரத்து செய்ய அதிக நேரம் ஆகாது, சரி அப்படி செஞ்சா நீ என்ன செய்வ? சண்டைக்கு வருவியா?


சுந்தர்
ஜூலை 05, 2025 05:51

ஒண்ணா கச்சத்தீவை திருப்பிக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மீனவர்களை கைது செய்யக்கூடாது. எல்லை தாண்டி வந்து பிடித்த மீன்களை வேண்டுமானால் பறிமுதல் செய்யலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை