வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பத்தாது ....ஆவோணும் .....
டிரம்ப்புக்கு தரைவழிப்போர், வான்வெளிப்போர், கடல்வழிப்போர் எல்லாம் போரடித்துவிட்டதாம். ஆகையால் இந்த வரி விதிப்பு போர். அவரே சொல்கிறார் அவருக்கு வரி என்கிற வார்த்தை ரொம்ப பிடிக்கும் என்று.
பீஜிங்: அமெரிக்கா தன்னிச்சையான இரட்டை நிலைபாட்டை கடைப்பிடிக்கிறது. நாங்கள் போராட பயப்படவில்லை. எதிர் நடவடிக்கை எடுப்போம் என 100 சதவீத வரி அறிவித்த அமெரிக்கா முடிவுக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டிரம்ப் பதவியேற்றுக் கொண்டதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100 சதவீதம் கூடுதல் வரி விதிப்பதாக நேற்று டிரம்ப் அறிவித்தார். இந்த கூடுதல் வரிவிதிப்பு வரும், நவ., 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார்.இதையடுத்து, சீனப் பொருட்களுக்கான வரி விதிப்பு ஏற்கனவே உள்ள 30 சதவீதத்துடன், தற்போதைய 100 சதவீதத்தையும் சேர்த்து 130 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமெரிக்கா தன்னிச்சையான இரட்டை நிலைபாட்டை கடைப்பிடிக்கிறது. எதிர் நடவடிக்கை எடுப்போம்.அமெரிக்காவின் அதிக வரி விதிப்பு சீனாவின் நலன்களுக்குக் கடுமையான தீங்கு விளைவிக்கிறது. இருதரப்பு பொருளாதார மற்றும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளுக்கான சூழ்நிலையைப் பலவீனப்படுத்துகிறது. சீனா போராட விரும்பவில்லை. ஆனால் போராட பயப்படவில்லை.அமெரிக்கா தனது தவறான நடைமுறைகளை உடனடியாக சரிசெய்து, சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளின் நிலையான வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். அமெரிக்கா தனது போக்கில் தொடர்ந்தால், சீனா அதன் சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்க தக்க நடவடிக்கைகளை எடுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இம்மாத இறுதியில் அதிபர் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷீ ஜின்பிங், ஆசிய நாடான தென்கொரியாவில் நடைபெற உள்ள ஆசியா - பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் சந்திக்க திட்டமிடிருந்தனர். தற்போது, அந்த சந்திப்புக்கு அவசியம் ஏற்படவில்லை என்று டிரம்ப் கூறியுள்ளார். இருநாடுகளுக்கு இடையே வர்த்தப்போர் தீவிரம் அடைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
பத்தாது ....ஆவோணும் .....
டிரம்ப்புக்கு தரைவழிப்போர், வான்வெளிப்போர், கடல்வழிப்போர் எல்லாம் போரடித்துவிட்டதாம். ஆகையால் இந்த வரி விதிப்பு போர். அவரே சொல்கிறார் அவருக்கு வரி என்கிற வார்த்தை ரொம்ப பிடிக்கும் என்று.