உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / குழந்தைகளை வன்முறைக்கு தூண்டும் வகையில் ஆயுதங்கள்: ஹமாஸ் மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு

குழந்தைகளை வன்முறைக்கு தூண்டும் வகையில் ஆயுதங்கள்: ஹமாஸ் மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: குழந்தைகளிடம் வன்முறையை தூண்டி விடும் வகையில் ஆயுதங்கள் மற்றும் வடிவமைக்கப்பட்ட விளையாட்டு பொருட்கள் ஹமாஸ் தளபதியின் வீட்டின் அருகே கிடைத்து உள்ளன என இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.காசாவின் கான் யூனிஸ் பகுதியில் உள்ள பள்ளியில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். இது குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் 3 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டனர். ஹமாஸ் தளபதி ஒருவரின் வீடு அருகே, எறிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள், வெடிக்க கூடிய தோட்டாக்கள் மற்றும் கவச உடைகள் குவியலாக கிடைத்தன.அந்த ஆயுதங்களில் சில, குழந்தைகளின் படுக்கையறையின் உள்ளே காணப்பட்டன. பொம்மைகள் மற்றும் விளையாட்டு பொருட்களுக்கு அடுத்து அவை கிடந்தன. குழந்தைகளிடம் வன்முறையை தூண்டி விடும் வகையில் ஆயுதங்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் ஹமாஸ் தளபதியின் வீட்டில் இருந்து கிடைத்து உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

அப்புசாமி
ஜன 07, 2024 14:31

கண்ணு முன்னாஇ கடிடங்கள் மீது குண்டுமழை. பெற்றவர்களும், சுற்றமும் செத்து விழறாங்க, இல்லே கை கால் சிதறி நடப்பிணமா வர்ராங்க. இதெயெல்லாம் பார்க்கும் போது குழந்தைகள் மனதில் பாலும் கருணையும்.பெருக்கெடுத்திடுமா? என்ன இஸ்ரேல் லாஜிக்ரா இது?


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜன 07, 2024 14:07

அவர்கள் இளவயதில் இருந்தே தங்கள் குழந்தைகளுக்கு இரத்தம் பார்க்கவும், கொலை செய்வதை நேரடியாக பார்க்கவும், வளரிளம் பருவத்தில் கொலை செய்யவும் பழக்குகிறார்கள். அவர்களின் முக்கிய பண்டிகை நாட்களில் இந்த பழக்கம் உருவாகிறது. இல்லங்களிலும் கிட்டத்தட்ட தினசரி புலால் உண்ணும் பழக்கம் ஏற்படுகிறது. இது காட்டு விலங்குகள் தங்களின் குழந்தைகளுக்கு வேட்டையாட பழக்குவதை போன்றதே. அவர்கள் இன்னும் மனிதர்களாக பரிணாம வளர்ச்சி அடையவில்லை.


NicoleThomson
ஜன 07, 2024 13:16

படிக்கவே சங்கடமா இருக்கு


Senthoora
ஜன 08, 2024 03:31

எது சங்கடம், இஸ்ரேல் வைத்தியசாலைகளிலும் பள்ளிக்கூடங்களிலும் விமானதாக்குதல் நடத்தி 800 குழந்தைகளுக்கு மேல் கொன்றார்கள், அதுபற்றி சங்கட மாட்டிர்களா?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை