உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தூக்கத்தில் ஜோ பைடன்; 3ம் உலகப்போர் மூளும்: குண்டு போட்டார் டிரம்ப்

தூக்கத்தில் ஜோ பைடன்; 3ம் உலகப்போர் மூளும்: குண்டு போட்டார் டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: 'அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தூக்கத்தில் இருக்கிறார். இதனால், 3ம் உலகப்போர் மூளும் அபாயம் உள்ளது' என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.இஸ்ரேலுக்கும், ஹிஸ்புல்லாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள சண்டை குறித்து, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள டொனால்டு டிரம்ப் கூறியதாவது: மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ச்சியாக குண்டுகள் வீசப்படுவது கவலை அளிக்கிறது. இதே நிலை நீடித்தால் 3ம் உலகப்போர் மூளும் அபாயம் உள்ளது.

முக்கிய நாள்

இது குறித்து அமெரிக்கா சார்பில் பேச்சுவார்த்தை நடத்துவது யார்? அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தூக்கத்தில் இருக்கிறார். அவர் கலிபோர்னியா கடற்கரையில் தூங்கி கொண்டு இருக்கிறார். அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறும் நவம்பர் 5ம் தேதி வரலாற்றில் முக்கிய நாள். இவ்வாறு அவர் கூறினார்.

பைடன் கவனிக்கிறார்!

இதற்கிடையே, இஸ்ரேலுக்கும், ஹிஸ்புல்லாவுக்கும் இடையே சண்டை அதிகரித்த நிலையில், வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் சீன் சாவெட் கூறியதாவது: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறார். இஸ்ரேலின் தற்காப்பு உரிமையை நாங்கள் தொடர்ந்து ஆதரிப்போம். மேலும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்காக நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 26, 2024 13:10

யாரு அமெரிக்க ஜனாதிபதி ஆனாலும் அமெரிக்காவின் கொள்கைகள் மாறாதவை ..... குறிப்பாக பொருளாதார மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் ..... ஆட்சியில் இருக்கும்போது ஒரு கொள்கை ... எதிர்க்கட்சி ஆனபிறகு ஒரு கொள்கை என்ற வேஷம் ஒரு அவலம் ... அசிங்கம் ..... அது நடப்பது இந்தியாவில்தான் .....


Sampath Kumar
ஆக 26, 2024 09:20

நிச்சயம் போர் வரும் இஸ்ரேல் ஒரு நாசகார சக்தி அதுனாலதான் அவனுக்களை ஹில்டெர் கொன்று குதித்தான் அதுக்கு அமெரிக்கா சப்போர்ட் இருக்காதா பின்னே அங்கே அமெரிக்காவை ஆடி படைக்கும் இஸ்ரேல் கும்பல் தான் அதிகாரத்தில் உள்ளது ஆக போர் வரும் இந்திய யாரு பக்கம் பார்க்கலாம்


God yes Godyes
ஆக 26, 2024 08:32

மிஸ்டர் ட்ரம் சொன்னா கரக்ட்டுங்கோ.


அப்பாவி
ஆக 26, 2024 08:21

மூளட்டும்டா... ஏற்கனவே ஜனத்தொகை முழி பிதுங்குது. கொஞ்சம் குறையட்டும்.


சமீபத்திய செய்தி