உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நேபாளத்தின் முன் உள்ள வாய்ப்புகள் என்னென்ன?

நேபாளத்தின் முன் உள்ள வாய்ப்புகள் என்னென்ன?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தெற்கு ஆசியாவில் இலங்கை மற்றும் வங்கதேச அரசுகள் கவிழ்க்கப்பட்டது போலவே, தற்போது நேபாள அரசும் மக்கள் புரட்சியால் கவிழ்க்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் அங்கு அரசியலில் புதிய எதிர்காலம் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. முதலாவதாக கவனம் பெறுவது, காத்மாண்டு சுயேச்சை மேயர் பாலேந்திரா ஷாவின் எழுச்சி. புரட்சிகரமான பேச்சு, அடிமட்ட மக்கள் மீதான அக்கறை உள்ளிட்ட குணங்கள், இளைஞர்கள் மத்தியில் பாலேந்திரா ஷாவை கொண்டு சேர்த்திருக்கிறது. அரசியலில் பாலேந்திரா ஷா ஏற்படுத்திய எழுச்சி, வாரிசு அரசியலை விலக்கி வைத்து பொறுப்பான, வெளிப்படைத் தன்மை நிரம்பிய அரசியலை அடுத்த தலைமுறைக்கு கடத்தி இருக்கிறது.

சவால்கள்

பாலேந்திர ஷா நேபாளத்தின் பிரதமராக பதவியேற்றால், அவருக்கு ஏராளமான சவால்கள் காத்திருக்கின்றன. முடங்கிப் போன பார்லிமென்டை பழைய அரசின் விசுவாசிகள், அரசியலில் வலுவாக ஊறிப் போன அறிவுஜீவிகள் என பல தடைகளை அவர் சந்திக்க வேண்டி இருக்கும்.

மோசமான ஆபத்து

மற்றொரு சூழ்நிலை இதை விட ஆபத்தானது; அது ராணுவத்தின் தலையீடு. வன்முறையாளர்களை அடக்க நேபாளம் முழுதும் தற்போது ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். மக்களை அமைதி பாதைக்கு திருப்பும் முயற்சியில் அவர்கள் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றனர். எனினும் நேபாள அரசியல் சாசனத்தின்படி, உள்நாட்டில் புரட்சியோ, மிகப் பெரிய அளவிலான போராட்டமோ வெடித்தால், எந்த நிலையிலும் ராணுவம் குறுக்கிட முடியும். தற்போது நேபாளத்தின் அரசியல் வெற்றிடமாக இருக்கும் சூழலில், ராணுவத்திடம் ஆட்சி கைமாறி இருப்பதும், மோசமான ஆபத்தாகவே பார்க்கப்படுகிறது.

மீண்டும் மன்னராட்சி

இந்த குழப்பங்களுக்கு நடுவே, பழைய பூதம் ஒன்று மீண்டும் கிளம்பி இருக்கிறது. அது, 2008ல் முடிவுக்கு வந்த மன்னராட்சியை மீண்டும் அமல்படுத்துவது. மன்னர் ஆட்சிக்கான ஆதரவு குழுக்கள், இந்த புரட்சியை பயன்படுத்தி, மக்கள் மத்தியில் செல்வாக்கை அறுவடை செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன. சர்வாதிகாரம் நிறைந்திருந்தாலும், மன்னராட்சியின் போது அரசியல் ஸ்திரத்தன்மை இருந்ததாக, ஆதரவு குழுக்கள் பிரசாரம் செய்து வருகின்றன. முன்னாள் மன்னர் ஞானேந்திரா ஷா, 'மீண்டும் மன்னராட்சி மூலமே அரசியல் ஸ்திரதன்மையை நிலைநாட்ட முடியும்' என, ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். மீண்டும் மன்னராட்சி மலர்வது என்பது சாத்தியம் இல்லாதது என்றாலும், சோர்வை ஏற்படுத்திய ஜனநாயக ஆட்சிக்கு பதிலாக மன்னராட்சி எவ்வளவோ மேல் என்ற வகையில் சிறிய பட்டாசை தன் பங்குக்கு அவரும் கொளுத்தி போட்டு இருக்கிறார். நேபாளத்தில் தற்போது நடக்கும் கலவரங்களுக்கு காரணம் வெறும் உள்நாட்டு பிரச்னை என கருதிவிட முடியாது. அதையும் கடந்து சர்வதேச அரசியலின் தலையீடும் இருக்கிறது. அதற்கு ஒரு தீப்பொறியாக பயன்படுத்தப்பட்டது தான் சமூக ஊடகங்கள் மீதான தடை. போதாக்குறைக்கு சமூக ஊடகங்கள் மீதான தடையை எதிர்த்து, இளைஞர்கள் மேற்கொண்ட பிரசாரமும் அரசு மீதான கோபத்தை மக்களிடையே அதிகப்படுத்தி, தெருக்களில் இறங்கி போராட வைத்திருக்கிறது. அதன் விளைவாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அங்கு கவிழ்ந்திருக்கிறது. வீதிகள் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன. எங்கு பார்த்தாலும் பதற்றம் நிலவுகிறது. அரசு இயந்திரங்கள் செயல்படாமல் முடங்கி இருக்கின்றன.

வாரிசு அரசியல்

இந்த புரட்சி முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்துமா? அல்லது மீண்டும் ஒரு ஸ்திரமற்ற அரசாட்சிக்கு வித்திடுமா என்பது அடுத்து அமையப் போகும் அரசின் கைகளில் தான் இருக்கிறது. தவிர, 'நேப்போகிட்ஸ்' எனப்படும் வாரிசு அரசியல் அமைப்பை முற்றிலும் அழிப்பதற்கான துணிச்சல் புதிய அரசுக்கு இருக்குமா என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறது. இந்தப் போராட்டங்கள் ஒன்றை மட்டும் உறுதிபடுத்தியுள்ளது. அது அரசியல்வாதிகள் ஊழல்களை, வாரிசு அரசியலை மக்கள் ஏற்கவில்லை. திறமையான ஆட்சியாளர்களே தேவை என்பதை, இளம் தலைமுறையினர் போராட்டத்தின் மூலம் சுட்டிக் காட்டியுள்ளனர். -நமது சிறப்பு நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Thirumal Kumaresan
செப் 11, 2025 14:52

பொது சொத்துக்களை சேத படுத்துவது அறப்போராடடம் அல்ல, மாணவர்கள் சிந்திக்க வேண்டும், யானை தன் தலையில் மண் அள்ளிப்போடுவது போல் செய்கை இது. போராட வேண்டியது தான் .சொத்துக்களை சீரழிக்காமல் செய்திருக்க வேண்டும். உங்களால் இறந்த ஒரு உயிரை, பொருளை உருவாக்க முடியுமா. சிந்தியுங்கள்,


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 11, 2025 13:52

[இந்தப் போராட்டங்கள் ஒன்றை மட்டும் உறுதிபடுத்தியுள்ளது. அது அரசியல்வாதிகள் ஊழல்களை, வாரிசு அரசியலை மக்கள் ஏற்கவில்லை. திறமையான ஆட்சியாளர்களே தேவை என்பதை, இளம் தலைமுறையினர் போராட்டத்தின் மூலம் சுட்டிக் காட்டியுள்ளனர்.] ஊ ஊ பீயி ஸ் ஐ விட அங்கே இருக்கிறவன் பீடாவாயன் ரொம்ப பரவால்லையோ >>>>


பெரிய குத்தூசி
செப் 11, 2025 13:35

நான் அடிக்கடி நேபாள் செல்பவன். அங்குள்ள மக்கள் நமது பிரதமர் மோடியின் மீதும் இந்தியா மீதும் பாசிட்டிவ் வான நல்ல ஒருமித்த கருத்தை கொண்டுள்ளவர்கள், அதையும் மீறி பிரதமர் மோடியின் நிர்வாக தின் மீது பற்று கொண்டு மோடியின் மீது பாசம் பற்று கொண்டவர்கள் நேபாள மக்கள். நேபாளத்தை இந்தியாவுடன் இணைத்து விடுவது நன்மை, இதற்கு நேபாள மக்கள் கண்டிப்பாக உடன்படுவார்கள். பெரிய தீவிரவாதி அமெரிக்கா தலையீடு இல்லாவிட்டால் நேபாள மக்கள் இந்தியாவுடன் இனைய விரும்புவார்கள், இரு நாடுகள் இணைப்பு பல வகைகளில் இருநாடுக்கும் நன்மை பயக்கும்.


தத்வமசி
செப் 11, 2025 11:45

இரண்டே வாய்ப்பு. மீண்டும் மன்னராட்சி வர வேண்டும். இல்லை ஜனநாயகம் என்கிற பெயரில் பண நாயகம் தான் ஆட்சிக்கு வரும்.


sankaranarayanan
செப் 11, 2025 11:15

இப்போது திராவிட மாடல் அரசும் இங்கே மன்னர் ஆட்சியைத்தான் நடத்திக்கொண்டிருக்கிறது மன்னரின் வாரிசிகள் தலையெடுத்து ஆட்சியை பிடிக்கத்தான் சூழ்சசி நடந்து கொண்டிருக்கிறது இங்கே இபோது நேபாளம் போல நடக்கப்போகிறது மக்கள்தான் கூறவேண்டும்


VSMani
செப் 11, 2025 16:32

நேப்பாளிகளுக்கு இருக்கிற துணிச்சல் தமிழர்களுக்கு இருந்தால் தமிழ்நாட்டில் வாரிசு அரசியல் எப்போதே ஒழிந்திருக்கும்


ஆரூர் ரங்
செப் 11, 2025 10:29

சமூக வலைத்தளங்களில் காட்டப்படும் மேற்கத்திய ஸ்டைல் ஆடம்பர வாழ்க்கைக்கு பெரும்பாலான மக்கள் ஆசைப்படுகின்றனர். எந்த அரசாலும் அப்படிப்பட்ட சொகுசு வாழ்க்கையை வீடு தேடிச் சென்று வழங்க முடியாது. உலகப் பொருளாதார வீழ்ச்சி கடுமையாக இருக்கும்போது எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ள வேண்டும். போராட்டம் பொதுச் சொத்துக்களை அழிப்பதன் மூலம் பெரிய மாற்றங்களை கொண்டு வர முடியாது. போராட்டம் மூலம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த வங்கதேசமும் இலங்கையும் மீளவேயில்லை


தென்காசி ராஜா ராஜா
செப் 11, 2025 08:16

தமிழ் நாட்டில் நடக்கும் குடும்ப ஆட்சிக்கு இது மாதிரி நடந்தா நல்லது


nisar ahmad
செப் 11, 2025 10:50

இந்தியாவில் நடக்கும் மத அரசியலையும் எதிர்த்து இது போல புரட்சி வெடிக்க வேண்டும் கூண்டோடு எல்லோரையும் அழிக்க வேண்டும்


sankar
செப் 11, 2025 12:07

தம்பி சொல்வது சரி - நித்தம் ஒரு ஊழல் என்று நடந்துகொண்டு இருந்ததை வேடிக்கை பார்த்த மன்மோகன் அரசு அதில் இடம் பெட்ரா இங்கிருந்து சென்ற "கறைபடிந்த" அமைச்சர்கள் - இவர்களுக்கு எதிராக கலவரம் வெடித்து இருக்க வேண்டும்


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 11, 2025 12:41

தம்பி கூறியது போல மத அரசியல் ஜாதி அரசியல் வாரிசு அரசியல் முற்றிலும் ஒழிக்க வேண்டும். சிறுபான்மையினர் சிறுபான்மையினர் என்று இரக்கம் காட்டி இந்து மத எதிர்ப்பு செய்யும் அரசியல் ஒழிக்க வேண்டும். ஜாதி அடிப்படையில் ஒரு அரசே மக்களில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று கூறுவது ஒழிக்க பட வேண்டும். மெரிட் தகுதி இவைகளை முன்னிறுத்தி அனைவருக்கும் சமமான சமூக அந்தஸ்து தரப் பட வேண்டும். கீழ் மட்ட அரசியல்வாதிகள் முதல் மேல் மட்ட அரசியல்வாதிகள் வரை உள்ள வாரிசுகளின் அடாவடி தனங்களுக்கு முற்று புள்ளி வைக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவர் அரசியல் வந்து எம்எல்ஏ எம்பி மந்திரி முதன் மந்திரி ஜனாதிபதி என யார் வந்தாலும் அவரது வாரிசுகள் யாருக்கும் எந்த விதமான கட்சி பதவியோ எம்எல்ஏ எம்பி மந்திரி முதன் மந்திரி ஜனாதிபதி ஆகும் வாய்ப்பு தரவே கூடாது. அனைத்தும் அந்த குறிப்பிட்ட நபருடன் முடிந்து விட வேண்டும்.


Mahendran Puru
செப் 11, 2025 07:44

நேபாள அரசியல் என்றுமே ஸ்திரத்தன்மை அற்றதாகவே உள்ளது. மன்னராட்சி முடிவுக்கு வந்ததிலிருந்தே இந்த நிலைமைதான். நேபாளிகளுக்கு மன்னராட்சியே சரி.


புதிய வீடியோ