உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அடுத்த தலைவராக யாருக்கு வாய்ப்பு?

அடுத்த தலைவராக யாருக்கு வாய்ப்பு?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெஹ்ரான்: ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி ஆட்சி கவிழ்க்கப்பட்டாலோ அல்லது இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளில் அவர் கொல்லப்பட்டாலோ, அவருக்கு பின் யார் அரசின் தலைவராக பொறுப்பேற்க அதிக வாய்ப்பு உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.மொஜ்தபா கமேனி : கமேனியின் இரண்டாவது மகன். ஈரான் துணை ராணுவமான இஸ்லாமிய புரட்சிகர காவல்படை மற்றும் செல்வாக்குமிக்க மத தலைவர்களுடன் இவருக்கு வலுவான தொடர்பு உண்டு. வாரிசு ஆட்சிக்கு எதிர்ப்பு இருந்தாலும், தலைமை பொறுப்புக்கு இவரை தயார்ப்படுத்தி வந்ததாக உளவுத் தகவல் உள்ளது. மொஜ்தபாவின் தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் தந்தையின் ஆதரவு இவரின் முக்கிய பலம்.அலிரெஸா அராபி : மூத்த மதகுரு. நிபுணர் சபையின் துணைத் தலைவர். குவாமில் உள்ள ஷியா முஸ்லிம் மதப்பள்ளியின் தலைவர். உயரிய தலைவர் பதவிக்கான வேட்பாளரை அனுமதிக்கும் கார்டியன் கவுன்சில் உறுப்பினர். ஈரானின் மத மற்றும் அரசியல் அதிகார மையங்களுடன் இவருக்கு ஆழமான தொடர்பு உள்ளது.ஹாஷிம் ஹொசைனி புஷேஹ்ரி : நிபுணர் சபையின் முதல் துணைத் தலைவர். குவாம் மதப்பள்ளியின் கல்வி சங்க தலைவர். குவாமில் நடக்கும் வெள்ளிக்கிழமை தொழுகைக்கான இமாம். இந்த பதவிக்கு இவரை கமேனியே நேரடியாக நியமித்தார். மத மற்றும் அரசியல் ரீதியாக செல்வாக்கு மிக்கவர்.ரெசா பஹ்லவி: ஈரானின் கடைசி மன்னர் முகமது ரெசா பஹ்லவியின் மகன். 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பின் நாடு கடந்து அமெரிக்காவில் வாழ்கிறார். மதச்சார்பற்ற, ஜனநாயக ஈரானை ஆதரிக்கிறார். மன்னராட்சியை மீண்டும் கொண்டுவருவதை விட, மக்களின் ஓட்டெடுப்பு வாயிலாக ஆட்சி மாற்றத்தை வலியுறுத்துகிறார். ஈரான் மக்களிடையே இவருக்கு மிகுந்த செல்வாக்கு இருப்பதாக கருத்துக் கணிப்புகளும் வெளியாகியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

pat152
ஜூன் 19, 2025 12:27

பார்க்க எல்லாருமே அசல் தீவிரவாதி போலத்தான் இருக்கானுங்க


ஆரூர் ரங்
ஜூன் 19, 2025 10:44

அலி கமேனியின் பூர்வீகம் உத்தரப் பிரதேசம் காஜியாபாத். அடிப்படைவாதிகள் கூட இங்கிருந்தே...


Rizwan
ஜூன் 19, 2025 08:51

ஆக்கிரமிப்பு/வந்தேறி இஸ்ரேலியர்கள் அடுத்த பிரதமர்?


ஆரூர் ரங்
ஜூன் 19, 2025 10:45

முகலாய வந்தேறிகளுக்கு இதிலென்ன ஆர்வம்?.


பழனி துரை
ஜூன் 19, 2025 07:38

ஈரான் ஒரு மதச்சார்பற்ற நாடு என்று தெரிகிறது. திமுக, விசி, காங்கிரஸ், வைகோ ஆதரவு உண்டு.


நிவேதா
ஜூன் 19, 2025 07:38

போட்டுத்தள்ளிவிட்டால் இஸ்ரைலின் அடுத்த பிரதமர் யார் என இன்னும் உங்களுக்கு தெரியவில்லையா?


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஜூன் 19, 2025 08:09

அவங்க தேச பற்று உள்ள மக்க, உன்னை போல் 200 உபி இல்ல


நிவேதா
ஜூன் 19, 2025 11:27

ஒரு செய்தி ரெண்டுபக்க விளைவுகளையும் விவரிக்க வேண்டும். இந்த செய்தி உன்னை போன்ற விசிலடிப்பான்களை சந்தோஷப்படுத்த ஒருபக்கத்தை சார்ந்து எழுதியது. அதைதான் நான் குறிப்பிட்டேன். உன்னைபோன்றவர்களுக்கு 200 ரூபாய் அல்லது 2 ரூபாய் பெரிய தொகையாக இருக்கலாம் அல்லது உன்னைபோன்றவர்கள் அணிலாக இருந்து அல்லது ஊர்ந்து சென்று பெருமைபடலாம். உன்னைப்போல் அனைவரையும் நினைக்காதே.


நிவேதா
ஜூன் 19, 2025 12:34

தேசப்பற்று ஹிந்து மதத்துக்கு மட்டும் சொந்தமானதல்ல. சுநத்திரத்துக்காக ரத்தம் சிந்தியவர்கள் ஹிந்துக்கள் மட்டுமல்ல, இஸ்லாமியர்களுமே. அனைத்து மதங்களிலும் கொலை, கொள்ளை, ஊழல், பலாத்கார குற்றவாளிகள் உள்ளனர். நீங்கள் நினைப்பது போல் காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா கேவலமாகவும் இல்லை, பிஜேபி ஆட்சியில் அனைவரும் செல்வசெழிப்போடுமில்லை. வித்தியாசம் என்னவென்றால் காங்கிரஸ் சிறுபான்மை மதத்துக்காக பெரும்பான்மை மதத்தினர் சகிப்புத்தன்மையோடு செல்ல வலியுறுத்தியது. இந்த அரசு அதை சரிசெய்கிறது. எல்லைப்பாதுகாப்பு, ராணுவம், தீவிரவாத ஒழிப்பு ஆகிய விஷயங்களை காங்கிரெஸ்ஸை விட பிஜேபி நன்றாக கையாளுகிறது. மற்றபடி சாமானியர்களுக்கு இரண்டு ஆட்சியிலும் ஒரே நிலை தான். ஔவையார் கூறியபடி "வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும். குடி உயரக் கோல் உயரும், கோல் உயரக் கோன் உயர்வான்" என்ற நிலை இப்போது இல்லை. ஜி என்ன செய்தாலும் அதனால் சாமானியன் கஷ்டப்பட்டாலும் அதை நாட்டுக்காக பொறுத்துக்க சொல்லி ஒரு கூட்டம் அதை தவறு என்று சொன்னால் நமக்கு கிடைப்பது anti-indian பட்டம் அல்லது கருத்து சொல்லுபவரின் மதம் என்னன்னு கூட தெரியாமல் மூர்க்கன், 200 உபி என்ற பட்டங்கள். திருந்து


ராமகிருஷ்ணன்
ஜூன் 19, 2025 07:24

அடுத்த தலைவர் என்று சொல்கிறீர்களா அல்லது அடுத்த பலிஆடு என்று சொல்ரீகளா.


Kulandai kannan
ஜூன் 19, 2025 07:12

ஷா பஹ்லாவியைத் தவிர யார் பதவிக்கு வந்தாலும், நாள் கணக்கில் தான் பதவியில் இருக்க முடியும்.


Kasimani Baskaran
ஜூன் 19, 2025 03:48

யார் பதவிக்கு உரிமை கோரினாலும் இஸ்ரேலை தாக்குவோம் என்றுதான் சொல்வார்கள். டிரம்ப் ஆதரவு பாகிஸ்தான் வைத்திருக்கும் இஸ்லாமிய அணுகுண்டு இல்லாமல் அழிக்க வேண்டும்.


முக்கிய வீடியோ