உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மரணத்திற்கு பிறகு யாருக்கு தலைமை பொறுப்பு: 3 பேரை பரிந்துரைத்த அயதுல்லா கமேனி

மரணத்திற்கு பிறகு யாருக்கு தலைமை பொறுப்பு: 3 பேரை பரிந்துரைத்த அயதுல்லா கமேனி

டெஹ்ரான்: இஸ்ரேல் உடனான போரில் தான் கொல்லப்பட்டால், தலைமைப்பொறுப்புக்கு யார் வரவேண்டும் என்று 3 பேரை ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல்களை தொடங்கியதை அடுத்து, ஈரான் பதில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால், இரு தரப்புக்கும் உயிரிழப்புகளும், சேதங்களும் ஏற்பட்டுள்ளன. ஈரான் ஆட்சியாளரும் மதத் தலைவருமான அயத்துல்லா அலி கமேனியை இஸ்ரேல் குறிவைத்துள்ளது.இது தொடர்பாக தி நியூயார்க் டைம்ஸ் செய்தியில் கூறியிருப்பதாவது:இஸ்ரேல்- ஈரான் நாடுகளுக்கிடையே தற்போது போர் அதிகரித்து வரும் நிலையில், இந்த போரில் அமெரிக்காவும் ஈரானுக்கு எதிராக களம் இறங்கும் சாத்தியக்கூறுகள் எழும் நிலையில் அதற்கு ஈரான் அதிகாரிகளும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அப்படி ஒரு நிலையில் போர் தொடரும் போது, ஈரானின் தலைவர் கமேனிக்குப் பிறகு யார் பதவிக்கு வருவார் என்பது குறித்த பேச்சுவார்த்தைகள் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் தூதர்களால் ரகசியமாக நடத்தப்பட்டுள்ளன.இதனிடையே பதுங்குக் குழியில் தஞ்சமடைந்துள்ள ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி, தனக்குப் பிறகு நாட்டை வழிநடத்தக்கூடிய 3 பேர் பெயர்களை பட்டியலிட்டுள்ளார்.எனினும், இந்தப் பட்டியலில் அவரது மகன் மொஜ்தபா பெயர் இடம்பெறவில்லை. இஸ்ரேல் அல்லது அமெரிக்கா தன்னைக் கொல்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை அறிந்தே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.பாதுகாப்பு காரணமாக, மூத்த அதிகாரிகள் மற்றும் ராணுவத் தளபதிகள் தொலைபேசிகள் அல்லது மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வது உட்பட கடுமையான நடவடிக்கைகளை ஈரானிய புலனாய்வு அமைச்சகம் அமல்படுத்தி உள்ளது.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

S.L.Narasimman
ஜூன் 22, 2025 07:57

வீணே வம்பு இழுத்து அவிக அடி தாங்காம செத்தபின்பு யாருவரணும் என்று வாரிசை ஏன் தேடுவானேன்?


Donald
ஜூன் 22, 2025 06:57

We can pity with the announced 3 persons who will also be targeted


நிக்கோல்தாம்சன்
ஜூன் 22, 2025 05:02

எல்லாம் கமெனி என்று தான் எழுதுகிறீர்கள் , ஆனால் கமினேய் என்றும் அவரது பெயரை படிக்கலாம்


ashok kumar R
ஜூன் 22, 2025 00:49

இவர்களும் இந்தியாவின் சில கட்சிகளை போல வாழை அடி வாழை ஆக தான் இருக்கும்.


P. Senthil
ஜூன் 22, 2025 00:17

P. Senthil


Krishna
ஜூன் 21, 2025 22:35

திருவாளர் ஜோக்கர் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். நாம் பாக்கிஸ்தானுடன் போரிட்ட பொழுது நமக்கு நேரடியாக ஆதரவு அளித்த ஒரே நாடு இஸ்ரேல் மட்டுமே. இந்தியர்கள் என்றும் நன்றி மறப்பதில்லை. எனவே நாம் அவர்களுக்கு ஆதரவு அளிப்பதில் தவறு இருப்பதாக தோன்றவில்லை. இதில் சங்கி மங்கி என்று வசை பாடுவதில் அர்த்தமில்லை.


Kulandai kannan
ஜூன் 21, 2025 22:15

தன் மகன் உயிரோடு இருக்க வேண்டும் என்பதால் அவரை வாரிசாக அறிவிக்கவில்லை.


theruvasagan
ஜூன் 21, 2025 21:56

தான் போன பிறகு இன்னும் எவனையெல்லாம் போட்டுத் தள்ளனும்னு லிஸ்ட்.போட்டு வச்சுருக்காப்பல. நல்லாதா போச்சு. இஸ்ரேல்காரன் தேடி அலைய வேண்டியதில்லை. மூணு பேர் சோலியையும் ஏக காலத்தில் முடிச்சு மேல அனுப்பிடுவான்.


Training Coordinator
ஜூன் 21, 2025 22:20

உனக்கு என்ன நமைச்சல். அவர் போவதற்கு முன்னால் இஸ்ரேல் காணாமல் போகும் வாய்ப்பு நிறையவே உள்ளன.


Perumal Pillai
ஜூன் 21, 2025 21:32

அந்த 3 பேர் மீது இவருக்கு என்ன கோபமோ...


சந்திரன்
ஜூன் 21, 2025 21:32

கவலை வேண்டாம் மத தலைவரே நீங்கள் நம்பும் அல்லா உங்களை காப்பாற்றுவார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை