உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அடுத்த ஜேம்ஸ்பாண்ட் நடிகர் யார்: அமேஸான் அதிபர் கையில் முடிவு!

அடுத்த ஜேம்ஸ்பாண்ட் நடிகர் யார்: அமேஸான் அதிபர் கையில் முடிவு!

லண்டன்: அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தில் 007 ஆக நடிக்கப்போவது யார் என்பதை, அமேஸான் நிறுவன உரிமையாளர் ஜெப் பீஸோஸ் முடிவு செய்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். க்ரைம் திரில்லர் படங்கள் என்பதால், எல்லா வயதினரும் அந்த படங்களை ரசிப்பர்.இதுவரை 25 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வந்துள்ளன. தொலைக்காட்சி தொடர்கள், காமிக்ஸ் புத்தகங்கள், கார்ட்டூன்கள் என ஏராளமானவை பாண்ட் பெயரில் உலகம் முழுவதும் வெளியாகி, ரசிகர்களை கவர்ந்துள்ளன.அந்த அளவுக்கு ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டது. அந்த பாத்திரத்தை ஏற்று நடிக்கும் நடிகர்களும், பெரும் புகழ் அடைந்து விடுகின்றனர்.சீன் கானரி தொடக்க கால படங்களில் ஜேம்ஸ் பாண்ட் ஆக நடித்தார். அவருக்கு பிறகு ரோஜர் மூர், ஜேம்ஸ் பாண்ட் ஆக நடித்து புகழ் பெற்றார்.கடைசியாக வெளியான 5 படங்களில் ஜேம்ஸ் பாண்ட் ஆக நடித்தவர் டேனியல் கிரேக். கடைசியாக 2021ல் 'நோ டைம் டூ டை' என்ற படம் வெளியானது.அதன் பிறகு ஜேம்ஸ் பாண்ட் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.இந்நிலையில் ஜேம்ஸ் பாண்ட் படங்களின் பிரான்சாய்ஸ் உரிமத்தை அமேஸான் எம்.ஜி.எம்., ஸ்டூடியோஸ் பெற்றுள்ளது. அமேஸான் நிறுவன உரிமையாளரான ஜெப் பீஸோஸ் தான், இதன் உரிமையாளர்.இதனால், அடுத்த ஜேம்ஸ் பாண்ட் நடிகர் யார் என முடிவு செய்யும் நிலையில் பீஸோஸ் இருக்கிறார்.இந்நிலையில், அவர், 'அடுத்த பாண்ட் நடிகராக நீங்கள் யாரை விரும்புகிறீர்கள்' என்று எக்ஸ் தளத்தில் தன்னை பின் தொடர்வோரிடம் கேள்வி எழுப்பினார்.பல்வேறு சமூக வலைதளங்களிலும், இதற்கான பதில் பதிவுகளை ரசிகர்கள் வெளியிட்டு வருகின்றனர்.அதில், சூப்பர்மேன் பாத்திரத்தில் நடித்த நடிகர் ஹென்றி கேவில் முன்னணியில் இருக்கிறார். டேனியல் கிரேக், ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தில் நடிக்க 2006ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டபோதே, பரிசீலனையில் இருந்தவர் தான் ஹென்றி கேவில். அப்போது அவர் வயதில் மிகவும் இளையவராக தோன்றியதால் தேர்வு செய்யப்படவில்லை என்று படத்தின் இயக்குனர் மார்ட்டின் கேம்பெல் தெரிவித்திருந்தார்.இந்த பெயர் தவிர, டாம் ஹார்டி, ஆரோன் டெய்லர் ஜான்சன், இத்ரிஸ் எல்பா ஆகிய நடிகர்களின் பெயர்களும், பீஸோஸ் வசம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.ஜேம்ஸ் பாண்ட் கதா பாத்திரம், பெண்ணாக மாற்றப்படவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.அப்படி ஒருவேளை பெண் உளவாளியாக பாண்ட் பாத்திரம் மாறினால், அதற்கு சிந்தியா எரிவோ என்ற நடிகையை ரசிகர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம், பிரிட்டீஷ் எழுத்தாளர் இயான் பிளெமிங் என்பவரால் 1953ல் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

இளந்திரையன் வேலந்தாவளம்
பிப் 23, 2025 17:08

நான் சிறு வயதில் பார்த்த முதல் ஆங்கில படம் ரோஜர் மூர் நடித்த The man with the golden gun. தற்போது எனக்கு பிடித்த நடிகர்கள்.. சீன்கானரி, பியர்ஸ் பிரான்சினனக, டைனியல் கிரெய்க். அடுத்த bond Undisputed 3 ல் நடித்த scot adikins நடித்தால் செம்மையாக இருக்கும்


Radhakrishnan Seetharaman
பிப் 23, 2025 11:25

கருப்பின ஆணோ அல்லது பெண்ணோ அடுத்த ஜேம்ஸ் பாண்ட் ஆகும் வாய்ப்புள்ளது


RAMAKRISHNAN NATESAN
பிப் 23, 2025 09:40

யாராக இருந்தாலும் திரையில் ...கடலில் மூழ்கி முத்தெடுக்க வேண்டும் ..... .


Senthoora
பிப் 23, 2025 06:27

ஒரு தச்சு தொழிலாளியின் மகன், நண்பர்கள் தொல்லையால் இரவல் உடைவாங்கி, பஸ்சில் பயணம் செய்து, நடிகர் தேர்வுக்கு வந்தவர் சீன் கானரி, அடுத்து ரோஜர் மூர் இவர்கள் இருவரைத்தவிர யாரும் பிரகாசிக்க வில்லை.


Bye Pass
பிப் 22, 2025 23:29

Legend Saravanan?


Ramaraj P
பிப் 22, 2025 23:05

கண்டிப்பாக கருப்பு இனத்தவர் இல்லை


chennai sivakumar
பிப் 22, 2025 22:19

ஜேம்ஸ் பாண்ட் என்றால் சீன் கானரி மட்டுமே. பிறகுதான் மற்றவர்கள். இப்போதைய இளைய தலை முறை யாரை விரும்புவார்கள் என்பது ஒரு புதிர்


முக்கிய வீடியோ