உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உலக புகழ்பெற்ற மக்களின் நீதிபதி பிராங்க் காப்ரியோ; 88 வயதில் காலமானார்

உலக புகழ்பெற்ற மக்களின் நீதிபதி பிராங்க் காப்ரியோ; 88 வயதில் காலமானார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: கருணை மிகுந்த தீர்ப்புகளுக்காக உலகம் முழுவதும் புகழ்பெற்ற அமெரிக்க நீதிபதி பிராங்க் காப்ரியோ காலமானார். அவருக்கு வயது 88. இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.அமெரிக்க பிரபல நீதிபதியும், சமூக ஊடக நட்சத்திரமுமான பிராங்க் காப்ரியோ,88. இவர் கணைய புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்தார். ஆனால் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இவரது நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் அவர் வழங்கும் தீர்ப்புகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.அவரது தீர்ப்புகள், கருணை அடிப்படையில் இருக்கும். வழக்கு விசாரணையும் எவர் மனதையும் புண்படுத்தாமல், காண்பவர் மனம் திருப்தி அடையும் வகையில் இருக்கும்.நீதிமன்ற அறையில் அவரது கருணை மற்றும் நகைச்சுவை உணர்வுக்காக மிகவும் விரும்பப்பட்ட நீதிபதி கேப்ரியோ, 'Caught in providence' என்ற நிகழ்ச்சியின் வாயிலாக உலகம் முழுவதும் பிரபலமானார். உலகின் மிகச்சிறந்த நீதிபதி என்று அவரை பல்லாயிரக்கணக்கான பேர் கொண்டாடி வருகின்றனர்.நீதிபதி காப்ரியோ தனது சொந்த ஊரான ரோட் தீவின் பிராவிடன்ஸில் ஆயிரக்கணக்கான வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கினார். தனது கடைசி சமூக ஊடகப் பதிவுகளில் ஒன்றில், நீதிபதி காப்ரியோ தனது உடல் நலம் குணம் அடைய பிரார்த்தனை செய்யுமாறு கேட்டு கொண்டார். நீதிபதி காப்ரியோவுக்கு 60 வயது மனைவி ஜாய்ஸ் காப்ரியோ உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஐந்து குழந்தைகள், ஏழு பேரக்குழந்தைகள் மற்றும் இரண்டு கொள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Natarajan Ramanathan
ஆக 21, 2025 22:26

வறுமையினால் செய்த ஒரு சிறு குற்ற வழக்கில் நீதிமன்றத்தில் இருந்த அனைவருக்கும் பத்து டாலர் அபராதம் விதித்து தானும் பத்து டாலர் கொடுத்து அந்த பணத்தை குற்றம் சாட்டப்பட்டவருக்கு கொடுத்தார்.


jss
ஆக 21, 2025 21:44

Besides being a very humorous and kind judge, he was the most humane person. He was particularly kind to War veterans destitute s, and senior citizens. His wit and humour captures everyone's imagination. indeed it is Avery sad day to receive the news of his demise.


Ramesh Sargam
ஆக 21, 2025 21:01

நீதிபதி பிராங்க் காப்ரியோவின் தீர்ப்புக்கள் அற்புதமானவை. எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவை. அவரைப்போல இந்தியாவில் நீதிபதிகள் பணியாற்றவேண்டுமென்பது எனது ஆசை.


montelukast sodium
ஆக 21, 2025 20:14

I wish we had a few hundred more judges like him. A true humanitarian.


montelukast sodium
ஆக 21, 2025 20:09

Its people like Frank Caprio who should win the Nobel peace prize.


V RAMASWAMY
ஆக 21, 2025 18:47

His approach to cases was superb. Rather than following the customary rule by law, he applied his own common sense, under what circumstances or why the cream was committed, etc., accuseds background etc. and gave such verdicts that satisfied one and all. A lot has to be learned and followed by those practising Law. A great loss indeed.


shakti
ஆக 21, 2025 17:32

நம்ம ஊரிலும் இருக்கானுங்களே நீதி பேதிகள் வீட்டில் தீவிபத்து நடந்தால்தான் தெரியும் இவனுங்க லட்சணம்


spr
ஆக 21, 2025 17:32

நீதிபதிகள் சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில்தான் தீர்ப்பு கூறுவது வழக்கம். ஒருவர் நியாயத்தின் அடிப்படையில் தீர்ப்பு கூறினார் என்றால் பாராட்டலாம் கருணையின் அடிப்படையில் என்றால் நம் நீதிபதிகள்தான் பாராட்டப்பட வேண்டும். என்ன ஆனாலும் வெள்ளைக்காரர் என்றால் நமக்கு இன்னமும் ஒரு மதிப்பும் மரியாதையும் இருக்கிறது.


Swaminathan
ஆக 21, 2025 17:19

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த ஒரு நீதிபதியின் இறப்புக்கு நமது நாட்டில் செய்தியாக வெளியிடும் அளவிற்கு புகழ் பெற்றார் என்றால் அவருக்கு கண்டிப்பாக தலைவணங்கி அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்க வேண்டும்.


theruvasagan
ஆக 21, 2025 17:07

ஓம் சாந்தி.


சமீபத்திய செய்தி