உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உலகின் நம்பர் ஒன் பணக்காரர்; எலான் மஸ்க் - லேரி எல்லிசன் போட்டா போட்டி

உலகின் நம்பர் ஒன் பணக்காரர்; எலான் மஸ்க் - லேரி எல்லிசன் போட்டா போட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: உலகின் நம்பர் ஒன் பணக்காரர் பட்டியலில் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கை பின்னுக்குத் தள்ளி, ஒராகிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எல்லிசன் நேற்று முதல் இடத்தை பிடித்தார். ஆனால் சில மணி நேரங்களில் மீண்டும் எலான் மஸ்க் முதலிடத்திற்கு வந்தார்.உலகின் பணக்காரர்கள் பட்டியலை புளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டுக்கான நம்பர் ஒன் பணக்காரர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.அதில், 385 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் இருந்த எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க்கை, ஒராகிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எல்லிசன் பின்னுக்குத் தள்ளினார். இவரது சொத்து மதிப்பு 393 பில்லியன் அமெரிக்க டாலராகும். கடந்த 2021ம் ஆண்டு பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க் முதல்முறையாக முதலிடத்திற்கு முன்னேறினார். அதன்பிறகு, அமேசானின் ஜெப் பெசோஸ் மற்றும் எல்விஎம்எச்-ன் பெர்னார்டு அர்னால்ட்டிடம் முதலிடத்தை இழந்தார்.கடந்த ஆண்டு மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறிய எலான் மஸ்க், 300 நாட்களுக்குப் பிறகு அந்த இடத்தை பறிகொடுத்தார்.81 வயதான எல்லிசன் ஒராகிள் நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைவருமான லேரி எல்லிசனின் பெரும்பாலான சொத்துக்கள் அவரது நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஒராகிள் நிறுவனத்தின் பங்குகள் ஏற்கனவே அதிகரித்து காணப்பட்ட நிலையில், புக்கிங்கில் எழுந்த வளர்ச்சி, உள்கட்டமைப்பு மற்றும் நம்பிக்கையளிக்கும் அறிவிப்புகளால், அந்த நிறுவனத்தின் பங்குகள் மேலும் 41 சதவீதம் அதிகரித்தன. இதனால் நேற்று ஒரே நாளில் ஆரக்கல் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 89 பில்லியன் டாலர் அதிகரித்தது. இது வரலாற்றில் இல்லாத ஒரு நாள் உயர்வாகும்.இதனால் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற இடத்தை எல்லிசன் பிடித்தார்.இப்படி சில மணி நேரங்கள் உலகின் நம்பர் ஒன் பணக்காரராக எல்லிசன் இருந்த நிலையில், மீண்டும் காட்சிகள் மாறின. எலான் மஸ்க் நிறுவனங்களின் பங்கு மதிப்பு உயரத் தொடங்கியது. இதனால் ஒரு பில்லியன் டாலர் சொத்து மதிப்பு வித்தியாசத்தில் மீண்டும் எலான் மஸ்க் முதலிடத்திற்கு வந்தார்.இந்த இருவர் இடையிலான நம்பர் ஒன் பணக்காரர் இடத்தை கைப்பற்றும் போட்டி, அமெரிக்க தொழில் வர்த்தகத் துறையினர் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்திய தொழிலதிபர்கள்

இந்தப் பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பானி 97.9 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துகளுடன் 18வது இடத்திலும், கவுதம் அதானி 80.9 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்துகளுடன் 21வது இடத்திலும் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Vijay D Ratnam
செப் 11, 2025 14:15

இந்த ஷோ காட்டுற வேலையெல்லாம் இங்குட்டு வச்சிக்காதீங்க. என்னதான் தலை கீழா நின்னு தண்ணி குடிச்சாலும் எலான் மஸ்க் ஆகட்டும் லேரி எல்லிசன் ஆகட்டும் எங்க கட்டுமர மாபியா கும்பலை நெருங்க கூட முடியாது.


SUBRAMANIAN P
செப் 11, 2025 13:55

அட போங்கப்பா... எத்தனை வாட்டி சொல்றது.. எங்க ஊர் பக்கம் ஒரு தடவை வந்துட்டு போங்க... அப்புறம் பாருங்க..


பெரிய குத்தூசி
செப் 11, 2025 12:57

ஆப் லைன் ரெகார்ட் படி தமிழக அரசின் மக்கள் பணத்தை கொள்ளை அடித்து சேர்த்து வைத்துள்ள எங்க திருட்டு திராவிட கும்பல் திமுக ஸ்டாலின் குடும்பம் தான் உலகின் நம்பர் 1 பணக்காரர். ஆகவே புளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் நிறுவனம் பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்து சேர்த்து வைத்துள்ள திமுக வின் ஆப் லைன் சொத்துகளை கணக்கீடு செய்து முறைப்படி அறிக்கை வெளியிட வேண்டும் என திமுக அல்லக்கை அன்னன் R S பாரதி அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவார்


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 11, 2025 12:23

எங்க கிம்ச்சை மன்னர் குடும்பம் போட்டியில இல்லையா அவரது ஆட்சிதான் விடியல் .... அறிவு ஜீவி முதல்வர் ...... பாஜக உள்ளே வரக்கூடாது ......


S.kausalya
செப் 11, 2025 12:04

அடுத்த தேர்தலிலும் நாங்க வெற்றி பெற்று விடுவோம்.உங்களுக்கு போட்டி ஆக நாங்களும் வருவோம். கனிம வளம்.எல்லாம்.சுரண்டி ஆகி விட்டது. இப்பொழுது எங்கள் பார்வை மனிதன் உறுப்புகளை கபளீகரம் செய்வதில் உள்ளது எனவே நாங்கள் முதல் இடத்தில் வருவதற்கு எங்கள் மக்களின் பேராசை உதவி செய்யும்


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 11, 2025 09:06

நம்ம திராவிட மாடல் டுபாக்கூர் எத்தனாவது இடத்தில் உள்ளார் என்று சொன்னால் டாஸ்மாக் டுமீலனுக்கு பெருமையா இருக்கும். அடுத்த பாட்டிக்கு கூட பத்து ரூவா கூட்டிக்குடுப்பான்..


Artist
செப் 11, 2025 11:59

பாட்டிக்கு பத்து ரூபாயா ?


பிரேம்ஜி
செப் 11, 2025 12:26

தெளிவு படுத்த வேண்டும்!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை