உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் /  ஏமன் 2,700 கைதிகளை விடுவிக்க ஹவுதி அமைப்புடன் ஒப்பந்தம்

 ஏமன் 2,700 கைதிகளை விடுவிக்க ஹவுதி அமைப்புடன் ஒப்பந்தம்

சனா: ஏமன் உள்நாட்டுப் போரின் போது பிடிக்கப்பட்ட 2,700 கைதிகளை விடுவிக்க ஏமன் அரசும், ஹவுதி பயங்கரவாத அமைப்பும் பரஸ்பரம் ஒப்பந்தம் போட்டுள்ளன. தென்மேற்கு ஆசிய நாடான ஏமனில், சவுதி அரேபிய ஆதரவிலான கூட்டணி அரசுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி பயங்கரவாதிகளுக்கும் இடையே, 2014ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்தப் போரின்போது ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்; ஏராளமானவர்கள் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில், ஓமன் தலைநகர் மஸ்கட்டில், ஐக்கிய நாடுகள் சபையின் மத்தியஸ்தத்தின் கீழ் ஏமன் அரசு - ஹவுதி பயங்கரவாதிகள் இடையே 12 நாட்கள் பேச்சு நடைபெற்றது. முடிவில் ஹவுதி தரப்பில் இருந்து 1,700 கைதிகளையும், அரசு தரப்பில் இருந்து 1,200 கைதிகளையும் விடுவிப் பது என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. விடுவிக்கப்படும் கைதிகளில் இரண்டு விமானிகள் உட்பட ஏழு சவுதி அரேபியர்களும், 23 சூடான் நாட்டவர்களும் அடங்குவர். கடந்த, 10 ஆண்டுகளில் இது மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றமாக பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ