உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாக்., தளபதியிடம் சர்ச்சைக்குரிய வரைபடம் தந்த யூனுாஸ்; வாலாட்டுகிறது வங்கதேசம்

பாக்., தளபதியிடம் சர்ச்சைக்குரிய வரைபடம் தந்த யூனுாஸ்; வாலாட்டுகிறது வங்கதேசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: இந்திய மாநிலங்களை உள்ளடக்கிய தங்கள் நாட்டின் சர்ச்சைக்குரிய வரைபடத்தை, பாகிஸ்தான் தளபதியிடம் வங்கதேச இடைக்கால தலைவர் முகமது யூனுஸ் கொடுத்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.வங்கதேசத்தின் முன்னாள் பிரதமராக ஷேக் ஹசீனா இருந்தவரை இந்தியாவுடன் அவர் நெருங்கிய நட்புறவை வளர்த்தார். இதனால் பாகிஸ்தான் வங்கதேசத்திடம் இருந்து விலகி இருந்தது. அதன் பின் எந்தவித இருதரப்பு பயணமும் நடக்கவில்லை. கடந்த 2024ல் நடந்த மாணவர் போராட்டத்தால் ஷேக் ஹசீனா பதவியை இழந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7500ey32&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வங்கதேசத்தில் இருந்து தப்பி இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து வங்கதேச அரசின் இடைக்கால ஆலோசகராக முகமது யூனுஸ் பதவியேற்றார். அவரது அரசில் இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக அங்கு சிறுபான்மை ஹிந்துக்களுக்கு எதிராக தக்குதல்கள் அதிகரித்துள்ளன. பாகிஸ்தானுடனான வங்கதேசத்தின் உறவும் வலுவடைந்து வருகிறது. பாகிஸ்தான் தலைவர்கள் வங்கதேசத்திற்கு செல்வதும், வங்கதேச தலைவர்கள் பாகிஸ்தான் செல்வதும் நடக்கத்தான் செய்கிறது.அந்த வகையில் பாகிஸ்தான் ராணுவத்தின் மூத்த தளபதி ஷாஹிர் ஷம்சாத் மிர்சா வங்கதேசம் சென்றுள்ளார். டாக்காவில் அவர், முகமது யூனுஸை சந்தித்து ஆலோசனை நடத்தினார். சந்திப்பின் போது, புத்தகம் ஒன்றை அவருக்கு பரிசாக அளித்தார். அந்த புத்தகத்தின் முகப்பில் உள்ள வரைபடம் தான் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது. அந்த வரைபடத்தில் வங்கதேச நாட்டுடன், இந்தியாவுக்கு சொந்தமான வடகிழக்கு மாநிலங்களும் இணைக்கப்பட்டுள்ளன. இந்த புகைப்படத்தை முகமது யூனுஸ் தனது சமூக வலைதள பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து இந்திய நெட்டிசன்கள் முகமது யூனுசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

V RAMASWAMY
அக் 28, 2025 10:01

வாலாட்டும் இந்த சிறிய நாட்டிற்கு கால கெடு கொடுத்து அடக்கவேண்டும்,


Venkat T
அக் 28, 2025 09:27

சோத்துக்கு பிச்சை எடுக்க வருவார்கள் சிறிது காலத்தில்., அப்பொழுது வரைபடம் ஒழுக்கமாக மாறும். அதுவரை பொரு மனமே.


Mohammed Usman
அக் 28, 2025 08:08

அருமையான வசனம் வாலாட்டுகிறது வங்கதேசம்


Kasimani Baskaran
அக் 28, 2025 04:06

அன்றே பாக்கிகளை வைக்கவேண்டிய இடத்தில் வைத்திருந்தால் இது போல ஆகியிருக்காது.


Ramesh Sargam
அக் 27, 2025 23:56

இந்தியாவை சீண்டிப்பார்க்கும் இந்த வங்கதேசம் மற்றும் பாக்கிஸ்தான், இரு நாடுகளுக்கும் இந்தியா ஒரு சரியான, அவர்களால் என்றென்றுக்கும் மறக்கமுடியாத அளவுக்கு ஓர் பாடத்தை கற்பிக்கவேண்டும். அதுவும் வெகு விரைவில். பாரத் மாதாவுக்கு வணக்கம்.


மணிமுருகன்
அக் 27, 2025 22:58

வங்க தேசதம் ்ப்போது இருகடகும் நிலையை சமாளிக்க முடியவில்லை முகமுது யூனுஸால் இதில் மாநில ்ணைப்பு வேற உலகத்தில் விளம்பர மோகத்தால் பாதிக்கபட்ட கூட்டம் அதிகமாகி உள்ளது அதில் வங்க தேச இடைக்காலத் தலைவரும் ஒருவர்


Bhaskaran
அக் 27, 2025 22:46

இவனுகளுக்கு நாம் உதவி செய்திருக்க கூடாது முஜிபுர் ரகுமான் வங்க பிரிவினையின் போது சுக்ரவர்த்தி என்பவருடன் சேர்ந்து இந்துக்களை கொன்ற கும்பலின் முக்கிய ஆள்..விதி அவரை படுகொலை செய்தது.


KRISHNAN R
அக் 27, 2025 22:28

நன்றி இல்லா நல்லொழுக்கம் இல்லா வாழ்க்கை


வாய்மையே வெல்லும்
அக் 27, 2025 20:39

நோபல் பரிசுக்கு லாயக்கறவர் கையில் அது கிடைத்தால் அவர் மனுஷ ஜென்மமே இல்லை என பொருள். இந்தமாதிரி ஆட்கள் எப்படி நோபல் முதலில் பரிந்துரைக்கப்பட்டது ? அதுவே கேள்விக்குறி.. ஒருகால் காசுகொடுத்து எதுனா குறுக்கு வழியில் வாங்கிட்டாரா


R. SUKUMAR CHEZHIAN
அக் 27, 2025 20:15

நாமும் இனி பிரிக்கப்படாத பாரத தேச வரைபடத்தை அதிகாரபூர்வ பாரத தேச வரைபடமாக காட்டவேண்டும். அகண்ட பாரதம் அடைந்தேன் தீருவோம்.


சமீபத்திய செய்தி