உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பொருளாதார தடைகளை விதிக்கணும்; புடின் பேச்சுவார்த்தையை விரும்பவில்லை என்கிறார் ஜெலன்ஸ்கி

பொருளாதார தடைகளை விதிக்கணும்; புடின் பேச்சுவார்த்தையை விரும்பவில்லை என்கிறார் ஜெலன்ஸ்கி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கீவ்: உக்ரைன் போரில் ரஷ்யா தனது மிகப்பெரிய வான்வழித் தாக்குதலை தொடங்கிய பின்னர், அதற்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்து உள்ளார்.இது குறித்து ஜெலன்ஸ்கி சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஷ்யா இன்னும் தாக்குதல் நடத்தி உக்ரைனுக்கு வலியை ஏற்படுத்த முயற்சிக்கிறது. புடின் உலகை சோதிக்கிறார்.ரஷ்யா மற்றும் ரஷ்யா உடன் தொடர்புடைய தனிநபர்களுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள், கடுமையான வரிகள் விதிக்க வேண்டும்.ரஷ்யாவுடனான வர்த்தகத்தில் பிற கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டும். புடின் பேச்சு வார்த்தைகளை விரும்பவில்லை. இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.உக்ரைனில் நடந்து வரும் மோதலுக்கு பதிலளிக்கும் விதமாக ரஷ்யா மீது கூடுதல் தடைகளை விதிக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இந்தசூழலில், ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

sankaranarayanan
செப் 08, 2025 19:07

அதை விட்டுவிட்டு அப்பாவியான இந்தியாவைத்தான் டிரம்ப் குறி வைக்கிறார் ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டிதான் கிடைத்தான் தைரியம் இருந்தான் ரஷ்யாவை நேரில் சந்திக்க வேண்டும் அதான் முடியாதே


SP
செப் 08, 2025 16:45

இவர் அமெரிக்காவை நம்புவதை விட ரஷ்யாவை நம்பினால் அதற்கு பலன் உண்டு வீம்புக்கு அழிந்து கொண்டிருக்கிறார்


Barakat Ali
செப் 08, 2025 14:16

நீயும் லேசுப்பட்ட ஆளில்லை.. தனிப்பட்ட பகைக்காக நாட்டையே பணயம் வைக்கிறாய் ....


JaiRam
செப் 08, 2025 13:55

புண்ணாக்கு......


Shivakumar
செப் 08, 2025 12:49

உக்ரைன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் சேர்ந்து ருசியாவை மண்டியிட வைக்கவேண்டும் என்று நினைக்கின்றார்கள். ஆனால் அவர்கள் நினைப்பது கனவிலும் நடக்க போவதில்லை. ஜெலின்ஸ்கிக்கு போரை நிறுத்த விருப்பம் இல்லை. ஒரு வேலை அவர் நிறுத்த நினைத்தாலும் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் நிறுத்த விடமாட்டார்கள். இதற்கு ஒரே தீர்வு ரஷ்யா உக்ரைனை வென்று ரஷ்யாவோடு இனைத்துவிடவேண்டும் .


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 08, 2025 11:43

அனுபவ அறிவு சிறிதும் இல்லாத அதிபர். விட்டு கொடுத்து விட்டு போவது நல்லது.


Balasubramaniam
செப் 08, 2025 11:10

ரஷ்யாவிடம் யுரேனியம் வாங்கும் அமெரிக்கா மேலே தான் முதல் தடை போட வேண்டும் என்று சொல்லி பாரேன்


ponssasi
செப் 08, 2025 10:53

தேசத்தில் பாதி இழந்துவிட்டாய், பொருளாதாரத்தில் 100 ஆண்டுகள் ஆண்டுகள் பின்தங்கிவிட்டது. விலைமதிப்பில்லா குழந்தைகள், இளம்தலைமுறையினர் இழந்துவிட்டாய். போதாதற்கு கனிமவளங்கள் அமெரிக்காவிற்கு தாரைவார்த்துவிட்டாய் இன்னும் என்ன செய்வதாய் இருக்கிறாய்


mohan
செப் 08, 2025 10:26

அதெப்படி, கை, அமெரிக்காவிடம் மாட்டி இருக்கும் போது, ரஸ்யாவுடன் எப்படி பேசுவது.. நேட்டோ கூப்பிட்டு பேசும் போதே,, அமைதியாக ரஸ்யாவிடம், பேசி இருந்தால், இதனை சொத்துக்கள் இழந்து இருக்க வேண்டியதில்லை. ஜெலன்ஸ்கி என்கின்ற ஒரு நபருக்காக, உக்ரேனியர்கள், ஏன் சொத்துக்களை இழக்க வேண்டும்.. .. முடிந்தால் ரஸ்யாவிடம் இணைத்து கொண்டால், இன்னும் பாதுகாப்பு அதிகம். ஜெலன்ஸ்கி புடின் உடன் பேசுவது நல்லது..


Artist
செப் 08, 2025 08:48

நம்ம தளபதி இந்த விஷயத்தில் தலையிட்டு முடிவுக்கு கொண்டு வர வாய்ப்பில்லையா ?


Pandi Muni
செப் 08, 2025 09:49

அப்படியே கிழிச்சிட்டாலும்


Anand
செப் 08, 2025 10:49

அவர் இன்னும் இதை பற்றி நினைத்துக்கூட பார்க்கவில்லை, அவர் மட்டும் சிலிர்த்தெழுந்தால் புடின், ஜெலன்ஸ்கி என்ன டிரம்ப் கூட பம்மி, பதுங்கி, அடங்கி, ஒடுங்கி இவர் கண்ணசைவிற்கு இணங்க போரை நிறுத்தி அமைதியாகிவிடுவார்கள்..


முக்கிய வீடியோ