உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போர் விரைவில் முடிவுக்கு வரும்; நம்பிக்கையுடன் சொல்கிறார் ஜெலென்ஸ்கி!

போர் விரைவில் முடிவுக்கு வரும்; நம்பிக்கையுடன் சொல்கிறார் ஜெலென்ஸ்கி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கீவ்: 'அமெரிக்கா அதிபர் பதவிக்கு டொனால்டு டிரம்ப் வருவதால், உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும்' என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். உக்ரைன், ரஷ்யா இடையே இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. டிரம்ப் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற உடன், உக்ரைன், ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என சபதம் விடுத்தார். இந்த சூழலில் உக்ரைன் நாட்டு ஊடகம் ஒன்றுக்கு, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அளித்த பேட்டி:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=r08qw0sh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0டொனால்ட் டிரம்ப அடுத்தாண்டு அமெரிக்கா அதிபராக பதவியேற்ற உடன் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யா போர் விரைவில் முடிவுக்கு வரும். இது நிச்சயம் நடக்கும். போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து சரியான தேதி எங்களுக்கு தெரியாது. சமீபத்தில் டிரம்புடன் மொபைல் போனில் உரையாடியது ஆக்கபூர்வமாக இருந்தது. எங்கள் நிலைப்பாட்டிற்கு எதிரான, எதையும் நான் கேட்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார். போர் விரைவில் முடிவுக்கு வரும் என ஜெலன்ஸ்கி கூறியது சர்வதேச அரசியலில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஆதரவு அளித்து வந்த, ஜோ பைடனின் ஜனநாயக கட்சி தோல்வியை தழுவியது. அமெரிக்காவின் ஆதரவு நிறுத்தப்படுமானால், அது உக்ரைனுக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமையும். ரஷ்யாவின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டிய நிலை உருவாகும் என்பதால் ஜெலன்ஸ்கி அச்சத்தில் இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

பேசும் தமிழன்
நவ 16, 2024 21:41

ஒரு கூத்தாடியை ஜனாதிபதி பதவிக்கு தெரிந்தெடுத்த உக்ரைன் மக்கள் அதற்க்கான பலனை அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள்.


அப்பாவி
நவ 16, 2024 17:29

2047 ராசியான நம்பர். அதுக்குள்ளாற முடிவுக்கு வந்துரும்னு சொல்லுங்க. நடக்கலேன்னா நேருதான் காரணம்னு சொல்லிக்கலாம்.


Kumar Kumzi
நவ 16, 2024 15:58

உன்னை போன்ற கேடுகெட்ட தலைவனை உக்ரேய்ன் மக்கள் இனியும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்


SUBRAMANIAN P
நவ 16, 2024 14:30

அறுபது வயசு ஆகி நாடி நரம்பெல்லாம் தளர்ந்து போச்சு இனி நீ வயசுக்கு வந்தா என்ன வாராக்காட்டி என்ன. கவுண்டமணி காமெடிதான் நினைவுக்கு வருது..


Sivagiri
நவ 16, 2024 14:02

ரஷ்யாவிடம் நட்பாக இருப்பதனால் - அல்லது அமெரிக்காவிடம் நட்பாக இருப்பதனால் - ஒன்றும் பிரச்சினை இல்லை - அல்லது இருவரிடமும் சேராமல் தூர போயி விடுவதால் பிரச்சினை இல்லை . . . ஆனால் ரஷ்யாவிடம் பகைத்தாலோ , அல்லது அமெரிக்காவிடம் பகைத்தாலோ , யாராவது ஒருவரிடம் பகைத்தாலே ரெண்டு பக்கமும் பிரச்சினைதான் . . . அந்த நாடே சீரழியும் , ஆஃப்கானிஸ்தான் ஈராக் , ஈரான் , இப்போ உக்ரைன் ,


Narasimhan
நவ 16, 2024 13:47

நாட்டை சுடுகாடு போல் ஆக்கிவிட்டு இனி நிறுத்தியால் என்ன நிறுத்தாவிட்டால் என்ன. அமெரிக்கா பேச்சை கேட்டு ஏமாந்த நாடுகள்தான் அதிகம். உன் நாடும் அதில் அடக்கம்


Rpalnivelu
நவ 16, 2024 13:11

சட்டி சுட்டதடா கை விட்டதடா புத்தி கெட்டதடா நாடு நாசமாச்சுதடா - செலென்ஸ்கி


RAMAKRISHNAN NATESAN
நவ 16, 2024 12:50

உன்னை வெச்சு காமெடி,கீமெடி செஞ்சதெல்லாம் பைடன் அரசு ன்னு இப்பவாச்சும் புரிஞ்சுதா மக்கா ????


Bye Pass
நவ 16, 2024 12:28

குதிரை வைக்கோல் சாப்பிடும் சூழ்நிலை


SUBBU,MADURAI
நவ 16, 2024 12:17

ஜெலன்ஸிக்கு இனிமேல் வேற வழி இல்லை இதுவரை ரஷ்யா காட்டி நீலிக்கண்ணீர் வடித்து அமெரிக்க அதிபர் ஜோ.பைடனை ஏமாற்றி அவரிடம் இருந்து மில்லியன் கணக்கில் டாலர்களையும் பில்லியன் கணக்கில் ஆயுதங்களையும் பெற்று வந்த அனைத்தையும் இப்போதைய புதிய அமெரிக்க அதிபராக வந்திருக்கும் டொனல்டு ட்ரம்ப் நிறுத்தி விடுவார் அதனால் ஜோக்கர் ஜெலன்ஸ்கி ரஷ்யாவிடம் நேரடியாக சரண்டர் ஆகாமல் டிரம்பின் மூலம் சரணடைய வெள்ளைக் கொடியை காட்டுகிறார் ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் என்னதான் பேச்சுவார்த்தை நடந்து போர் முடிவுக்கு வந்தாலும் வரும் காலத்தில் எக்காரணம் கொண்டும் நேட்டோ படைகளை உக்ரைனில் நிறுத்தக் கூடாது என்ற உக்ரைனின் சம்மதத்தோடு ஒப்பந்தம் போட்டுவிட்டுதான் ரஷ்ய அதிபர் புடின் இந்த போர் நிறுத்தத்தை ஒப்புக் கொள்வார்.


முக்கிய வீடியோ