உள்ளூர் செய்திகள்

சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் விஜயம்

வட இந்தியாவில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம், புதுடில்லி துவாரகாவில் உள்ள ஸ்ரீராம் மந்திருக்கு, நவ-9 அன்று விஜயம் செய்து, அனுகிரஹ பாஷணம், சந்திரமௌலீஸ்வர பூஜை மற்றும் தெய்வ சன்னதிகளுக்கு விசேஷ பூஜைகள் செய்தார். இவரது வருகையால் ஸ்ரீ ராம் மந்திரின் வரலாற்றில் ஒரு இணையற்ற மற்றும் புனிதமான நிகழ்வாக குறிக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகள் பக்திப்பெருக்குடன் மிக பிரமாண்டமாக செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர், மேலும் ஜகத்குரு மகாஸ்வாமி தனது ஆசிகளைப் பெற வந்த ஏராளமான பக்தர்களைக் கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார். பக்தர்கள் எல்லா நன்மைகளும் பெறும் வகையில் கருணைகூர்ந்து தமது அருளாசிகளை பொழிந்தார்கள்! - புதுடில்லியிலிருந்து நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்