அக்., 27 ல் அகண்ட சங்கீத உபாசனா - 2024
ஆஸ்திக சமாஜம், ரசிகப்ரியா, குருகுலம் அறக்கட்டளை மற்றும் தாள பக்தி ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, மனித குலத்தையும், ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும், இயற்கை பேரிடர்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன், தில்லி/என்.சி.ஆர் இசைக்கலைஞர்களின் இந்த "நாள் முழுவதுமான ஆராதனைக்கான" தனிப்பட்ட இசை நிகழ்ச்சியான சங்கீத சேவைக்கு உங்களை அன்புடன் அழைக்கிறது. இடம் : ஸ்ரீ ஜஸ்வர்யா மகாகணபதி கோவில், சி-2 லாரன்ஸ் சாலை, கேசவ்புரம், தில்லி - 110035 நாள் : 27 அக்டோபர் 2024 நேரம் : காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை) மேலும் விபரங்களுக்கு : தொடர்பு கொள்ளவும் : கைப்பேசி எண் : 9953544319, 9968303176, 9818192497 - நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்