கிழக்கு தில்லியில் அய்யப்பன் பஜன்
கிழக்கு தில்லி மயூர் விகார பேஸ் 2 ல் அமைந்துள்ள காருண்ய மகா கணபதி கோவிலில் வருடா வருடம் ஸ்ரீ தர்ம சாஸ்தா சேவா சமிதி மண்டல பூஜை நடத்தி வருகிறார்கள். அய்யப்பன் சந்நிதியில் அபிஷேகம் அலங்காரம் மற்றும் பஜனை ஹாலில் அய்யப்பன் படத்திற்கு சிறப்பு அலங்காரங்கள் தினமும் செய்யப்படுகிறது. மண்டலத்தில் மாலை தோறும் பஜனை நடைபெறுகிறது. உள்ளூர். கலைஞர்கள் தவிர வெளிமாநிலங்களில் இருந்தும் பிரபல பாடகர்கள் வரவழைக்கப்படுகிறார்கள். பஜனை இறுதியில் ஹரிவராசனம் பாடி ஆரத்தி எடுத்து பூஜைகள் நிறைவேறிய பிறகு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படுகிறது. தில்லியின் எல்லா பகுதிகளிலும் இது நடைபெறுகிறது. மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு பக்தி பெருக பாடி மகிழ்வது காணவேண்டிய காட்சி. கடந்த புதன்கிழமை கணேஷ் சேவா சமிதி மகளிர் குழு ராதா சங்கர் தலைமையில் பஜனை பாடினார்கள். அவருடன் இணைந்து விஜயலெட்சுமி மாதவன்,பிரதிக்க்ஷா,மாலா கரண், ஜெய்ஶ்ரீ சந்தானம், கிரிஜா, வீணா கோபால்,வினோத் மற்றும் பக்கவாத்ய கலைஞர்கள் இணைந்து நிகழ்ச்சியை சிறப்புற நடத்தினார்கள். - புதுடில்லியிலிருந்து நமது செய்தியாளர் மீனா வெங்கி