உள்ளூர் செய்திகள்

துவாரகா ஸ்ரீராம் மந்திரில் விநாயக சதுர்த்தி கொண்டாட்டம்

துவாரகா ஸ்ரீராம் மந்திரில், விநாயக சதுர்த்தியை முன்னிட்டு, காலை ஸ்ரீ அமிர்த கணபதி மற்றும் ஸ்ரீ வித்யா கணபதிக்கு, ஹோமம், அபிஷேகம் மற்றும் சஹஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது. மாலையில் ஸ்ரீ அமிர்த கணபதிக்கு அபிஷேகம் நடந்தது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கணபதி விக்ரஹத்தை கோவில் அர்ச்சகர் ஆஷிஷ் மிஸ்ரா மற்றும் தன்னார்வலர்கள் கோயிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். கோயில் வளாகம் முழுவதும் பஜனையுடன் ஊர்வலம் நடைபெற்றது, கிருஷ்ணமூர்த்தி மற்றும் எஸ். ஷைலஜா ஆகியோர் கணபதி பக்தி பாடல்களை பாடினர். பங்கேற்ற பக்தர்களுக்கு மோதகம், வடை மற்றும் தயிர் சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது. - நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !