செந்தமிழ்ப் பேரவை சார்பில் ஹோலிப் பண்டிகை
புதுதில்லி மயூர் விஹார் ஃபேஸ் 3ல் அமைந்துள்ள செந்தமிழ்ப் பேரவையின் சார்பில் ஹோலிப் பண்டிகை மிகவும் சிறப்பாக 25-03-2024 திங்கள்கிழமை அன்று மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது . இவ்விழாவில் பேரவையின் நிர்வாகிகள், குழந்தைகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் வண்ணப் பொடிகள் தண்ணிர் துப்பாக்கி மற்றும் தண்ணீர் பலூன்கள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ஓய்வு பெற்ற தமிழ்நாடு புள்ளி இயல் துறை கூடுதல் பொறுப்பு அதிகாரி கே.ஏ.சண்முகம் கலந்து கொண்டு அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார்.இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை துணைசெயலாளர் செல்வக்குமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ராஜரத்தினம் , தங்கராஜா மிகவும் சிறப்பாக செய்திருந்தனர். இவ்விழாவானது தலைவர் அ.மாரி தலைமையிலும் செயலாளர் ச.சரவணன் முன்னிலையிலும் இனிதே நிறைவுற்றது.