தில்லியில் கந்த சஷ்டி
தில்லி மயூர்விகார் காருண்ய மகா கணபதி கோவிலில் திருப்புகழ் வழிபாடு, கல்யாண உற்சவம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. முருகப்பெருமானை வழிபட வைகாசி விசாகம் , கந்தசஷ்டி, தைப்பூசம் என சிறப்பு காலம் வருடா வருடம் கொண்டாடப்படுகிறது. ஐப்பசி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை திதியில் துவங்கி, சஷ்டி வரையிலான 6 நாட்களும் கந்தசஷ்டி விழாவாக கொண்டாடப்படுகிறது பக்தர்கள் கந்தசஷ்டி விரதம் கடைபிடித்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுகிறார்கள். இந்நாளில் முருகனை விரதம் இருந்து வழிபட்டால் வேண்டியது கிடைக்கும். முக்கியமாக குழந்தை பாக்கியம் வேண்டி முருகனை நினைத்து விரதம் இருந்தால் அந்த கந்தனே குழந்தையாக பிறப்பான் என்பது நம்பிக்கை. முருகன் குடிகொண்டுள்ள கோவில் தோறும் கந்தசஷ்டி விழா தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தலைநகர் தில்லியில் மலை மந்திர் , மயூர்விகார் மற்றும் பல கோவில்களில் அபிஷேகம், ஹோமம் அலங்காரம், லட்சார்சனை என்று சிறப்பு வழிபாடு செய்வதை பார்க்கிறோம்.தலைநகர் திருப்புகழ் அன்பர்கள் ஒவ்வொரு கோவிலிலும் திருப்புகழ் பாடல்களை பாடுவது வழக்கமான ஒன்று.சங்கீத கச்சேரிகள் இந்த விழாவில் ஓர் அங்கம். அதே போன்று வள்ளி தெய்வானை திருமண நிகழ்வுடன் கந்த ஷஷ்டி நிறைவுகிறது. - நமது செய்தியாளர் மீனா வெங்கி