புத்திரபாக்கியம் தரும் குமார சஷ்டி
தலைநகர் கிழக்கு தில்லி சுப சித்தி விநாயகர் கோவிலில் முருகனுக்கு இன்றைய ஷஷ்டியை ஒட்டி சிறப்பு அபிஷேகம் திருப்புகழ் பஜனை உற்சவரின் பிரகார ஊர்வலம் என இன்றைய சிறப்பாக கொண்டாடப்பட்டது இன்றைய ஆனி மாத ஷஷ்டியை குமார் ஷஷ்டி என கொண்டாடுவர். சுப்பிரமணியன், முருகன், தண்டாயுதபாணி, வேலவன், ஆறுமுகம் என பல்வேறு நாமங்களால் போற்றி வணங்கப்படுபவர் முருகப்பெருமான். சிவனின் அருளால் தோன்றி அந்த சிவனுக்கே வேதத்திற்கு பொருளை கூறியவன் முருகன். தண்தமிழ் தெய்வமாக விளங்கும் முருகப்பெருமானை தமிழ் புலவர்கள் அனேக நூல்களில் பாடியுள்ளனர். சஷ்டி விரதம் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் பொதுவாகவே சஷ்டி விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை தங்கும் என்பது நம்பிக்கை. ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விரதம் இருக்கலாம். கார்த்திகை மாத வளர்ப்பிறை சஷ்டி விரதமும், ஆனி மாத வளர்பிறை சஷ்டியான குமார சஷ்டி விரதமும் இருக்க புத்திர பாக்கியம் கிடைக்கும். பக்தர்கள் மகப்பேற்றை வேண்டினால் முந்தி வந்து அருள் புரிபவன் முருகன். அவனே குழந்தையாக வடிவெடுத்து வருவான் என்பதும் நம்பிக்கை. முருகனைத் தியானித்து வழிபடப் பல விரதங்கள் இருக்கின்றன. அவற்றுள் மிக முக்கியமான விரதம் குமார சஷ்டி விரதம். ஆனி மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டியும், கார்த்திகை மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டியும் குமார சஷ்டி விரதம் ஆகும்.இம்மாதம் வரும் ஷஷ்டி குமார சஷ்டி விரதமாக கடைபிடிக்கப்படுகிறது. பக்தர்கள் இந்நாளில் முருகனை தரிசிக்க அனைத்து நலங்களும் பெறுவர் - நமது செய்தியாளர் மீனா வெங்கி