உள்ளூர் செய்திகள்

நொய்டா முருகன் கோவிலில் உடையாளூர் கல்யாணராமன் பாகவதரின் நாமசங்கீர்த்தனம்

நொய்டா முருகன் கோவிலில் உடையாளூர் கல்யாணராமன் பாகவதரின் 'நாமசங்கீர்த்தனம்' அக்டோபர் 12 அன்று ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவில், நொய்டாவில் கற்றறிந்த இசைக் கலைஞர் டாக்டர் உடையாளூர் கல்யாணராம பாகவதர் ஆகியோரால் 'நாமசங்கீர்த்தனம்' நிகழ்த்தப்பட்டது. அனுபவம் வாய்ந்த பாகவதர் அனைத்து மொழிகளிலும் கீர்த்தனைகளை பாடுகிறார். இந்தி புனிதர்களின் கீர்த்தனைகளின் அவரது மயக்கும் குரல் கேட்பதற்கு பெரிய விருந்தாக இருந்தது. இந்நிகழ்ச்சியை வேதிக் பிரச்சார் சன்ஸ்தான், தனது செக்டர் 62, நொய்டா ஸ்ரீ விநாயகா ஸ்ரீ கார்த்திகேயா கோவில் வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்தது. கன்னியா மாதம் என்பது தமிழில் புரட்டாசி மாதம் என்று அழைக்கப்படுகிறது. புரட்டாசி மாதம் மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது, அவரது அவதாரங்கள் ஸ்ரீ ராமர் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணர் ஆகியோருக்கும் இது சிறப்பு வாய்ந்தது. நாற்பது ஆண்டுகளாக பக்தர்களுக்கு சேவை செய்யும் வேதிக் பிரச்சார் சன்ஸ்தான் (வி பி எஸ்) இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது . வி பி எஸ், ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவில், செக்டர் 62 நொய்டா, மற்றும் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவில், செக்டர் 22, நொய்டா, இவ்விரண்டு கோவில்களையும் நிர்வகித்து வருகிறது.- நொய்டாவில் இருந்து நமது செய்தியாளர் வெங்கடேசன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !