ஹம்சினியில் உதித்த தாரகை நந்தினி ஜெயின்
ஹம்சினி நடன பள்ளியின் மாணவியும் குரு ஸ்ரீதர் வாசுதேவனின் சிஷ்யையுமான செல்விநந்தினி ஜெயினின் பரத நாட்டிய அரங்கேற்றம் அண்மையில் தில்லி LTG கலையரங்கில் நடைபெற்றது ஆரம்ப புஷ்பாஞ்சலி வலசியில் ரம்யமாக தொடங்கி விஷ்ணுவை போற்றிட சாந்தா காரம் .. அதற்கு குருவின் நடனகோர்வை. அதில் "வந்தே விஷ்ணும் பவபயகரம்" இடத்தில் எத்தனை வித பாவங்கள். தேர்ந்த நடனமங்கையாக மாறி மாறி பாவங்களை தப்பாமல் காட்டுவதாகட்டும் பூமி அதிராத துள்ளல் பார்க்கவும் ரசிக்கவும் முடிந்தது.முத்தாய்பாக தசாவதாரம் குருவின் தேர்ந்த கலைநயத்திற்கு உதாரணம்.அடுத்து TRS ன் வர்ணம். பேகாக்கில் குரு வாசுதேவன் லயித்து பாடுவதாகட்டும் நடன கோர்வையில் அரங்கில் அபிநயித்த நந்தினி ஆகட்டும் சுகமான அனுபவம். அனன்யாவின் நட்டுவாங்கம் அருமை. இதில் வன ஷாட்சம் நின்னே நம்மிதி இடம் குருவின் தேர்ந்த நடன கோர்வைக்கு முத்திரை பதித்தார் போல் இருந்தது. இத்தகு உயர்ந்த நடனகோர்வையை மிக சுலபமாக கையாண்ட மாணவி நந்தினிக்கு ஒரு சபாஷ். குழப்பம் இல்லாமல் தெளிவான பாவத்துடன் ஆடி முடித்தார். அதே போல் சாந்தினே நீ மற கோடி சுந்தர ரூப..இடமும் அருமை. சாதரண அரங்கேற்ற நிகழ்ச்சிகளில் இத்தகு கடினமான கோர்வைகள் கையாளப்படுவதில்லை. இதில் குருவின் நம்பிக்கை மற்றும் மாணவி நந்தினியின் தைரியம் இரண்டையும் குறிப்பாக சொல்லலாம். தேவியை போற்றி ராஜராஜேஸ்வரி அஷ்டகம் அழகு அருமை சிறப்பு. தேவி பாவங்கள் அவளின் லீலைகள் ரசிக்கும்படி இருந்தது. அடுத்து மீரா பஜனை தில்லானாவுடன் இணைத்து பாவபூர்வநடனம் தொடர்ந்து மங்களத்துடன் தனது அரங்கேற்ற நிகழ்ச்சியை நிறைவு செய்தார் நந்தினி.அன்றைய தினம் பாட்டு நட்டுவாங்கம் குரு வாசுதேவன், இணை நட்டுவாங்கம் அனன்யா சங்கர், மிருதங்கம் விக்னேஷ் ஜெயராமன், வயலின் ராகவேந்திரா, புல்லாங்குழல் ரஜத் பிரசன்னா ஆகியோர் இணைந்து சிறப்பித்தனர். முக்கிய விருந்தினராக ஒடிசி நடன கலைஞர் ஷரண் லோவர், கலை ஆர்வலர் மீனா வெங்கி, ஹிந்துஸ்தானி இசை கலைஞர் பத்ம ஸ்ரீ வசுபுதின் டாகர் ஆகியோர் கலந்து கொண்டு பாராட்டி பேசினர். நந்தினி பரத உலகில் சிகரங்களை தொட வாழ்த்துக்கள்.- நமது செய்தியாளர் மீனா வெங்கி