ஸ்ரீ தேவி காமாக்ஷி மந்திரில் நவ சண்டி ஹோமம்
புதுதில்லி : அசப் அலி மார்க்கில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி காமாக்ஷி மந்திரில் வசந்த நவராத்திரியை முன்னிட்டு, ஸ்ரீ நவ சண்டி ஹோமம் நாளாக அனுஷ்டிக்கபட்டது. வசந்த நவராத்திரியின் நிறைவாக ஸ்ரீராம நவமி கொண்டாடப்படுவதால் இதை ராம நவராத்திரி என்றும் சொல்லுவதுண்டு. நவ சண்டி ஹோமம் மிகவும் நம்பிக்கைக்குரிய ஹோமம் ஆகும், ஏனெனில் இது ஒளி மற்றும் தெய்வமான சண்டி தேவியுடன் வாழ்க்கையை ஒளிரச் செய்கிறது. இந்த ஹோமம் மகா தேவியை மகிழ்விப்பதற்கும், வாழ்க்கையில் அவளது அதிர்ஷ்டத்தை வரவேற்கவும் மிகவும் சக்திவாய்ந்த வழியாகும். நவ சண்டி ஹோமத்தில், ஒரு யாகம் மின்னல், ஒரு தீ குண்டம் அல்லது யாகம், மந்திரங்கள் மற்றும் தேவியைப் போற்றுதல் ஆகியவற்றுடன் நடைபெறுகிறது. துர்கா சப்தசதியிலிருந்து சிறப்புப் பாடல்களைப் பாடியும், சண்டிதேவியின் மகிமையைப் போற்றியும் ஹோமம் நடத்தப்படுகிறது.காலை கணபதி பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. இதைத் தொடர்ந்து, ஸ்ரீ தேவி மஹாத்மியம் பாராயணம், மஹன்யாஸ பாராயண ஜபம், ஏகாதச ருத்ர ஜபம் நடைபெற்றது. முப்பதிற்கும் மேற்பட்ட ரிக் வேதிகள் இதில் பங்கேற்றனர். புண்யாஹவசனம், சங்கல்பம், கலசபூஜா ஆவாஹனம், சண்டி பாராயணம், ஜபம், ஹோமம், பூர்ணாஹுதி, வசோர்தரா ஹோமம் ஆகியவை நடைபெற்றது.விநாயகர் மற்றும் ஶ்ரீ தேவி காமாட்சிக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. நிறைவாக தீபாராதனையும், பிரசாதமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்