நொய்டா கோவிலில் பிரதோஷம்
பிரதோஷத்தை முன்னிட்டு, நொய்டா செக்டர் 62 ல் உள்ள ஸ்ரீ விநாயகா ஸ்ரீ கார்த்திகேய கோவிலில் ருத்ர அபிஷேகம் நடந்தன. இதையொட்டி, சந்திரமௌலீஸ்வரர் மற்றும் திரிபுர சுந்தரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் உட்பட, சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. பக்தர்கள் சிவனை போற்றிய ஸ்லோகங்கள் மற்றும் பாடல்களை பாடினர். அனைத்து பூஜைகளையும் கோவில் வாத்தியார்கள் மணிகண்டன் சர்மா மற்றும் மோஹித் மிஸ்ரா நடத்தினர். மகா தீபாராதனை முடிந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. - நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்