உள்ளூர் செய்திகள்

நொய்டா கோவிலில் பிரதோஷ வழிபாடு

நொய்டா பிரிவு 62ல் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு 'ருத்ராபிஷேகம்' நடைபெற்றது. இந்த சந்தர்ப்பத்தில், ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரருக்கு அபிஷேகத்திற்கு பிறகு சிறப்பாக அலங்கரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிவனை போற்றிய ஸ்லோகங்களையும் பாடல்களையும் பாடினர். வி.பி.எஸ் ஆஸ்தான சாஸ்திரிகளான சங்கரின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் முழு பூஜைகளும் பஞ்சாம்ருதம், பால், தயிர், தேன், நெய், கரும்பு சாறு, மொசம்பி சாறு, சந்தனம் , விபூதி, மற்றும் பழச்சாறு போன்ற திரவ்ய பொருட்களால் அபிஷேகமும் கோவில் வாத்தியார்களான மணிகண்டன், மோஹித் மிஸ்ராவின் உதவியுடன் நிகழ்த்தப்பட்டன. மகா தீபாரதனைக்குப் பின் பிரசாதம் அனைத்து பக்தர்களுக்கும் விநியோகிக்கப்பட்டது. மழை இருந்த போதிலும், அதிக எண்ணிக்கையில் வந்து பூஜைகளில் பங்கேற்ற பக்தர்களின் அர்ப்பணிப்பை கோயில் மேலாண்மை பாராட்டியது.- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !