உள்ளூர் செய்திகள்

ராகு - கேது பெயர்ச்சி

ராகு - கேது பெயர்ச்சியை முன்னிட்டு புதுதில்லி துவாரகாவில் உள்ள ஸ்ரீராம் மந்திரில் ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். மங்கள ராகு கேதுக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. 18 மாதங்களுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் ராகு பகவான் ஏப்ரல் 26ம் தேதி சனிக்கிழமை மாலை 4:20 மணிக்கு மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்மம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி செய்தனர். அதிகாலை முதல் கலச ஸ்தாபனம், சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, ருத்ர பாராயணம், நவக்கிரஹ ஹோமம் ஆகியவை சரவணன் சாஸ்திரிகள் தலைமையில் நடைபெற்றன. ஏராளமானோர் சிறப்பு பரிகார பூஜைகளிலும் கலந்துகொண்டனர். ராகு, கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. - நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !