உள்ளூர் செய்திகள்

ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா 132வது அனுஷம் ஜெயந்தி

புதுதில்லி அருணா அசப் அலி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி காமாக்ஷி மந்திரில் ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவரின் 132வது அனுஷம் ஜெயந்தி இன்று மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. காலை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, சங்கல்பம், புண்யாஹவசனம், கலச ஸ்தாபனம், மஹன்யாஸ பாராயணம், ஏகாதச ருத்ர ஜபம், ஸ்ரீருத்ரநாம த்ரிஸதீ நாமார்ச்சனை, ஸிவாஷ்டோத்தர ஸத நாமாவளி மற்றும் கலச அபிஷேகம் நடைபெற்றது. குரு சந்திரசேகரன் தலைமையில், ரித்விக்குகள் திரளாக பங்கேற்று ருத்ர ஜபம் பாராயணம் செய்தனர். கோவிலில் அமைந்துள்ள ஆதிசங்கரர் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, தோடகாஷ்டகம் சொல்லி நிகழ்ச்சி நிறைவு செய்யப்பட்டது. பக்தர்கள் திரளாக இதில் கலந்து கொண்டனர். மகா பெரியவரின் ஆன்மிக பங்களிப்பு குறித்து கோவில் நிர்வாகி பொள்ளாச்சி கணேசன் பேசினார். மாலை உபநிஷத் வேத பாராயணம், பாதுகை பூஜை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஸ்ரீ மஹா பெரியவர் திருவுருவப் படத்துடன் மேளதாளங்கள் முழங்க கோவில் உள் பிரகாரத்தில் ஊர்வலம் நடந்தது. உம்மாச்சி தாத்தா என்று செல்லமாக குழந்தைகளாலும் மஹா பெரியவா என்று அனைத்து பக்த கோடிகளால் அன்புடன் அழைக்கப்படும் காஞ்சி ஸ்ரீகாமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதியானஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 132வது அவதார ஜெயந்தி தினம் மஹா பெரியவர் பக்தர்களால் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. - நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !