உள்ளூர் செய்திகள்

நொய்டாவில் மார்கழி மாத வீதி பஜனை

நொய்டாவில் 'மார்கழி மாத வீதி பஜனை'நொய்டாவின் வேதிக் பிரச்சார் சன்ஸ்தான் 'மார்கழி வீதி பஜனை', வி எஸ் எஸ் பஜனை மண்டலியின் ஸ்ரீ விஸ்வநாதன் பாகவதர் மற்றும் குழுவினர் பஜனைகளை வழங்கினர். பஜனை குழுவினர் ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவில் வளாகத்தில் துவங்கி, அருகில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோவில் வரை சென்று திரும்பினர்.சென்னை மயிலாப்பூர் கோவில் மாட வீதியில் நடக்கும் நாமசங்கீர்த்தனம் ஒரு தனித்துவமான வைபவம், என்பது நாம் எல்லோரும் அறிவோம். மயிலாப்பூரில் உள்ள புகழ்பெற்ற வீதி பஜனைகளில் நடைபெறுவது போலவே நொய்டாவில் நடந்தது.தனுர் மாதத்தை முன்னிட்டு , காலையில் ருத்ராபிஷேகமும், ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது.கடுமையான குளிர் காலம் மற்றும் மோசமான காற்றின் தரத்தை பொருட்படுத்தாமல் இசை ஆர்வலர்கள் கலந்து கொண்டு, நாமசங்கீர்த்தனம் பாடி மகிழ்ந்தனர். பங்கேற்ற இசை ஆர்வலர்களுக்கு கோயில் நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்தனர். அனைவருக்கும் மஹா பிரசாதம் வழங்கப்பட்டது.- நொய்டாவில் இருந்து நமது செய்தியாளர் வெங்கடேஷ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !