உள்ளூர் செய்திகள்

நொய்டா முருகன் கோவில் வளாகத்தில் இனிப்பு நீர் வழங்கல்

நிலவும் வெப்பத்தைப் பார்த்து, 'இனிப்பு நீர்', வேதிக் பிரச்சார் சன்ஸ்தான் நிர்வாகம், அதன் நொய்டா செக்டார் 62, ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவில் வளாகத்திற்கு வெளியே மூவாயிரத்திற்கும் மேல் மக்களுக்கு விநியோகிக்கப்பது . இந்த இனிப்பு நீரில், 750 லிட்டர் பிஸ்லேரி தண்ணீர், 24 லிட்டர் ரூவ்ஆசா (Rooffza) சிரப், 50 கிலோ வெள்ளை சர்க்கரை, 30 லிட்டர் டோன்ட் பால், மற்றும் 200 கிலோ ஐஸ் ஆகியவையால் கலக்கப்பட்டன. வடக்கில் பொதுவாகவே அழைக்கப்படும் 'சபீல்', இது மே மற்றும் ஜூன் மாதங்களில் டெல்லி மற்றும் அண்டை பகுதிகளில் வெப்பநிலை 45 டிகிரியை கடக்கும் இடங்களில் விநியோகிக்கப்படுகிறது. குழு உறுப்பினர்கள் : ஸ்ரீதர் ஐயர், ராஜு அய்யர், பாலாஜி, ராமசேஷன், வெங்கட்ராமன் அர்ஜுன், கோயில் வாத்தியார்கள் : மணிகண்டன் மற்றும் மோஹித் மிஸ்ரா, ஒரு குழுவாக சேர்ந்து பெரிய ட்ரம்மில், இனிப்பு தண்ணீரை கலக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். இதில் பராமரிப்பு ஊழியர்களும் முக்கிய பங்கு வகித்தனர். - நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !